உலகிலேயே சிறந்த நடிகர் மோடி.. பிளாக் பஸ்டர் படம்.. தெலுங்கு தேசம் எம்பி விமர்சனம்!
உலகத்திலேயே பிரதமர் மோடி சிறந்த நடிகர் என தெலுங்கு தேசம் எம்பி கேசனேனி சீனிவாஸ் விமர்சித்துள்ளார்.
டெல்லி: உலகத்திலேயே பிரதமர் மோடி சிறந்த நடிகர் என தெலுங்கு தேசம் எம்பி கேசனேனி சீனிவாஸ் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் விவாதத்தின் போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலளித்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஆக்ரோஷமாக அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலடி கொடுத்தார் பிரதமர் மோடி.

தெ.தே முழக்கம்
பிரதமர் மோடி பேச தொடங்கியது முதலே தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டு வந்தனர். வீ வான்ட் ஜஸ்டீஸ் என ஓயாமல் கோஷம் எழுப்பிய படியே இருந்தனர்.

அரைமணி நேரம் கேட்டார்
இந்நிலையில் பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்த பின் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி கேசனேனி சீனிவாஸ் பேசுவதற்கு அரை மணிநேரம் அனுமதி கேட்டார்.

வாக்குவாதம்
ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 5 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கினார். 5 நிமிடத்தில் எப்படி பதிலளிக்க முடியும் என கேசனேனி சீனிவாஸ் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார்.

பிளாக் பஸ்டர்
பின்னர் பேச தொடங்கிய அவர், ஒன்றரை மணிநேரம் பிரதமர் மோடி நன்றாக நடித்தார். பிரதமர் உரையை பார்த்தபோது பிளாக் பஸ்டர் படம் பார்த்ததை போல இருந்தது.

சிறந்த நடிகர்
உலகின் சிறந்த நடிகருக்கான திறமை மோடியிடம் உள்ளது. உலகத்திலேயே மோடி சிறந்த நடிகர் என்றும் கேசனேனி விமர்சித்தார்.

பாஜக எதிர்ப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த தெலுங்கு தேசம் எம்.பி. சீனிவாஸ் கேசனேனி பிரதமர் மோடி பதிலுரையை இவ்வாறு கிண்டலடித்தார். கேசனேனி சீனிவாஸின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
