ஆசிரியர் தேர்வு “வெயிட்டேஜ் மார்க்” வழக்கு- தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
டெல்லி: ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்த மதுரை உயர் நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25 இல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து வகையான இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசாணை 71 இல் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும் போது இப்படி அனைவருக்கும் வழங்குவது சரி இல்லை என்றும், வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும் என்றும். சென்னை ஹைகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் சிலரால் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட் கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது, இதைத்தொடர்ந்து மதுரை ஹைகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அம்மனுவில், "தமிழ்நாட்டில் அரசு தரப்பில் நடத்தப்படும் அனைத்து வகையான தேர்வுகளிலும் இதே போன்ற மதிப்பெண் விலக்குகள் மற்றும் இட ஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் இந்த முறை பின்பற்றப்படாத நிலை இருந்தபோது, தேர்வு எழுதக்கூடிய பல்வேறு இட ஒதுக்கீட்டு பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் ஏதேனும் ஒருவகையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி பிறகு அரசாணையாக வெளியிட்டது. அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டுதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே மதுரை ஹைகோர்ட் கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications