சசியின் இடைக்கால பொதுச்செயலர் பதவியே செல்லாது... இரட்டை இலை கிடைக்கும்: நம்பிக்கையில் ஓபிஎஸ் டீம்
சசிகலாவின் இடைக்கால பொதுச்செயலர் பதவியே செல்லாது; இரட்டை இலையும் தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது ஓபிஎஸ் அதிமுக.
டெல்லி: அதிமுக கட்சி விதிகளின்படி சசிகலா இடைக்கால பொதுச்செயலராக முடியாது; ஆகையால் சசிகலா தலைமையிலான அணிக்கு இரட்டை இலை கிடைக்காது என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் அதிமுக இருக்கிறது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிகலா அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக நீடிக்க முடியுமா? ஆகியவை தொடர்பான இறுதி முடிவை இன்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இதற்காக சசிகலா அதிமுக, ஓபிஎஸ் அதிமுகவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் இன்று காலை 10.30 மணிக்கு பஞ்சாயத்து தொடங்குகிறது. இந்த விசாரணையின் முடிவில் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது ஓபிஎஸ் அதிமுக.

பொதுச்செயலர் இல்லாத நிலையில்...
அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலர் இல்லாத நிலையில் முந்தைய பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை நடத்த முடியும்; இதன்படி பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்தான் கட்சியை வழிநடத்த முடியும். ஆகவே தாங்களே உண்மையான அதிமுக; எங்களுக்கே இரட்டை இலை சின்னம் என்பது ஓபிஎஸ் அதிமுக வாதம்.

யார் பொதுச்செயலர்?
அதேபோல் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலர் என்பவரை நியமனம் செய்ய முடியாது; இடைக்கால பொதுச்செயலர் என்பதே அதிமுக கட்சி விதிகளில் இல்லை; பொதுச்செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் சசிகலாவை இடைக்கால பொதுச்செயலராக நியமிக்க நிர்பந்திக்கப்பட்டோம். ஆகையால் அவரது இடைக்கால பொதுச்செயலர் நியமனமும் செல்லாது என்பதும் ஓபிஎஸ் அதிமுக விதி.

நம்பிக்கையில் ஓபிஎஸ் அதிமுக
அதிமுக விதிகளின்படி பார்த்தால் நிச்சயம் தாங்களே உண்மையான அதிமுக; தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என ஏராளமான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது ஓபிஎஸ் அதிமுக.

உபி விவகாரத்தை ஒப்பிட முடியாது
மேலும் உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் சின்னம் யாருக்கு என்ற பிரச்சனையில் பொதுச்செயலர் உயிரோடு இருந்ததால் சின்னம் யாருக்கு என்பது மட்டுமே சிக்கலாக இருந்தது. அதனால் பெரும்பான்மை நிர்வாகிகள் வசம் உள்ள அகிலேஷுக்கு சைக்கிள் ஒதுக்கப்பட்டது. அதற்கும் அதிமுகவின் பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஓபிஎஸ் அதிமுக.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications