பெங்களூரில் மூன்றரை வயது சிறுமியை பலாத்காரம் செய்த சாப்ட்வேர் என்ஜினியர்: சிறுமி வேறு யாரோ அல்ல...

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் மூன்றரை வயது சிறுமி அவரது மாற்றாந்தந்தையான சாப்ட்வேர் என்ஜினியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த 41 வயது சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பெங்களூரில் வசித்து வருகிறார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே திருமணமாகி மூன்றரை வயது மகளின் தாயான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Techie sexually assaults step daughter in Bengaluru

திருமணான ஒரு வாரத்தில் இருந்து அந்த நபர் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி அவர் சிறுமியை விளையாட அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சாப்ட்வேர் என்ஜினியரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் தாய் கூறுகையில்,

ஏப்ரல் 17ம் தேதி என் கணவர் என் மகளை விளையாட மாடிக்கு அழைத்துச் சென்றார். அன்று இரவே நாங்கள் கேரளாவுக்கு சென்றுவிட்டோம். என் மகள் விடாமல் அழுது கொண்டே இருந்தாள், தூங்கவும் இல்லை. அவள் என் கணவரை பற்றி ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படாததால் கண்டுகொள்ளவில்லை.

என் மகளின் மர்ம உறுப்பு பகுதியில் காயம் இருந்ததுடன், வீக்கம் இருந்தது. அவள் விளையாடுகையில் அடிபட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் என் மகள் தொடர்ந்து 2 நாட்கள் தூங்காமல் அழுது கொண்டே இருந்ததால் இது குறித்து அவளிடம் பேசி உண்மை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+