உச்சமெடுக்கும் குழந்தை திருமணம்.. தீவிரமடையும் கைது நடவடிக்கை.. தந்தையை காக்க மகள் தற்கொலை.. கொடூரம்
மாநிலம் முழுவதும் இளம்பெண்கள் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இவ்வழக்கில், தனது தந்தையை கைது செய்துவிடுவார்கள் என்று அஞ்சிய இளம்பெண் ஒருவர் பயத்தில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். இது அம்மாநிலத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் திருமண வயது என்பது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் திருமணம் செய்பவர்கள் சட்டப்படி தண்டனைக்கு ஆளாவார்கள். ஆனால் இன்னமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த குழந்தை திருமணம் அரங்கேறி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக தெரிய வந்ததையடுத்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா இதற்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து காவல்துறை இதுதொடர்பான வழக்குகளை தூசி தட்டியது. இப்படியாக மாநிலம் முழுவதும் மொத்தம் 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டியது. கடந்த 3ம் தேதி தொடங்கிய கைது நடவடிக்கையில் தற்போது வரை சுமார் 2441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு அஞ்சி பலர் தலைமறைவாகியுள்ளனர்.

கைது
அதிகபட்சமாக துப்ரி மாவட்டத்தில் 370 வழக்குகளும், இதற்கடுத்து ஹோஜாய் மாவட்டத்தில் 255 வழக்குகளும், உதால்குரி மாவட்டத்தில் 235 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 31 சதவிகிதமான குழந்தைகள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் தனது தந்தையை காவல்துறை கைது செய்துவிடுமோ என்று பயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை
தெற்கு சல்மாரா-மன்சச்சார் மாவட்டத்தை சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் இளம்பெண் கடந்த 2012ம் ஆண்டு சிறுமியாக இருந்தபோது வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் இடையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021ம் ஆண்டு இவருடைய கணவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து இப்பெண் தனது தாய் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் மாநிலம் முழுவதும் குழந்தை திருமணத்திற்கு எதிரான கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. எனவே எங்கு தனது தந்தையை கைது செய்து விடுவார்களோ என பயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மறுப்பு
ஆனால் இளம்பெண் இந்த காரணத்திற்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று மன்சச்சார் காவல் நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், "நாங்கள் இந்த குடும்பத்தில் உள்ள எவருக்கு எதிராகவும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே இந்த தற்கொலை ஏன் நடந்தது என்றும் எங்களுக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் இதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் பரவலாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேள்வி
அசாம் அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு ஐதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, குழந்தை திருமணம் செய்துகொண்டவர்களை கைது செய்யப்பட்டால் அவர்களின் குடும்பத்தின் நிலை என்ன? அந்த பெண்ணின் நிலை என்ன? என்றும் கேள்வியெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications