சிறுமியை பலாத்காரம் செய்து மிரட்டி மற்ற ஆண்களுக்கு விருந்தாக்க முயன்ற இளைஞர்! அம்மா வேறு உடந்தையாம்
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் டீன் ஏஜ் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் அதிர வைப்பதாக உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலத்தில் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளும் பெரியளவில் பலன் அளிப்பதாக இல்லை. இந்தச் சூழலில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் அனைவரும் அதிரச் செய்வதாக உள்ளது.

மத்திய பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜரிபட்காவில் காவல் நிலையம் ஒன்றுக்குச் சிறுமி வந்துள்ளார். டீன் ஏஜ் வயதில் இருந்த அந்த சிறுமி அதிர்ச்சியில் இருந்தார். முதலில் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவரை ஆசுவாசப்படுத்திய போலீசார், என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளனர். அப்போது அவர் பயந்து கொண்டே கூறிய தகவல்கள் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.

காதல் வலை
நாக்பூரில் உள்ள ஜரிபட்காவைச் சேர்ந்த அந்த டீன் ஏஜ் சிறுமி, இவண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மே மாதம் போபாலுக்கு வேலை விஷயமாகச் சென்று உள்ளார். அப்போது தான் குற்றஞ்சாட்டப்பட்ட 22 வயதான அபிஷேக் குரில் என்பரை முதல் முறையாகச் சந்தித்தார். நல்லவன் போல நடித்த அபிஷேக் குரில், அந்த சிறுமியைக் காதல் வலையில் விழ வைத்துள்ளான்.

பாலியல் பலாத்காரம்
அதன் பிறகு தனிமையில் இருக்கும் போது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது மட்டுமின்றி இந்த கொடூரனின் தாயார் ரஜினி (45) என்பவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்துள்ளது. இதன் பின்னர் குற்றவாளியும் அவனது தாயாரும் இணைந்து அந்த சிறுமியை மற்ற ஆண்கள் உடனும் உறவு கொள்ள வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது புகாரில் தெரிவித்து உள்ளார்.

புகைப்படங்கள்
மேலும், அந்த சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களையும் அந்த நபர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளி மீதும் அவரது தாயார் மீதும் போலீசார் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும், அவர்களைக் கைது செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications