ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
மங்களூர்: ரயிலில் இருந்து தவறி விழுந்த 19 வயது வாலிபர் பரிதாபமாக பலியான சம்பவம் மங்களூர் அருகே நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பந்தகாராவை சேர்ந்தவர் முகமது சல்மான் (19). கேரளாவில் உள்ள கார்மென்ட்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் சொந்த ஊர் வந்த அவர், நேற்று இரவு கேரளாவுக்கு ரயிலில் திரும்பினார்.
சல்மான் பயணித்த மட்சகந்தா ரயில், குந்தாப்பூர் தாலுகா முட்லுகோட்டே பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வாசல் படியின் அருகே நின்று கொண்டிருந்த சல்மான் கால் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த அடிபட்ட சல்மானை, குந்தாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.












Click it and Unblock the Notifications