ஒரு 'தம்' தர மறுத்த அண்ணனை அடித்து கொன்ற 'டீன்-ஏஜ்' தம்பி - டெல்லியில் நடந்த சோகம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரு 'தம்' தர மறுத்த அண்ணனை உடன் பிறந்த தம்பி அடித்து கொன்ற சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகை உயிருக்கு பகை என்று எத்தனையே முறை எச்சரிக்கை விடுத்தாலும். ஸ்டைலாக சிகரெட் பிடித்து புகையை விடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை பார்த்து சிகரெட் குடிக்க ஆரம்பித்தவர்களும் உண்டு. அதுவே சோக கதையாகிய சம்பவங்களும் நடந்தது உண்டு. அந்த வகையில் டெல்லியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெல்லி மங்கல்புரி பி பிளாக் பகுதியில் நேற்று இரவு டியூசன் முடித்து வந்த இளைஞர் (16) ஒருவர் அங்கு தனது அண்ணன் சிகரெட் குடித்துக் கொண்டிருப்பதைக் பார்த்துள்ளான். பின்னர் இவனுக்கும் தம் அடிக்கும் ஆசை வந்துள்ளது. இதையடுத்து அவன் அண்ணனிடம் சென்று ஒரு தம் தருமாறு கேட்டுள்ளான். தம்பியின் மீது உள்ள பாசமோ என்னமோ, தம்பிக்கு 'தம்' தருவதற்கு அண்ணன் மறுத்துவிட்டான்.
இதையடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தம்பி அங்கிருந்த நீண்ட கம்பி கொண்ட பொரிக்கும் சட்டியை எடுத்து அண்ணனின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டார். வலியால் அண்ணன் துடித்துள்ளான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த அச்சகோதரர்களின் பெற்றோர், மூத்த மகன் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்த செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்தவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனிடையே அண்ணனிடம் மன்னிப்பு கேட்பதற்காக வீட்டுக்கு வந்த தம்பி, அண்ணன் சடலமாக கிடப்பதை கண்டு கண்ணீர் விட்டார். நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் விவரித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், சிறார் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புவதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications