குஜராத் மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா சேடல்வாட்டை கைது செய்ய பிப். 19- வரை சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: குஜராத் மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா சேடல்வாட்டை கைது செய்ய வரும் 19-ந் தேதி வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது இந்துமதவெறி அமைப்புகள் முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். உலகை உலுக்கிய இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதில் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் குடும்பம் குடும்பமாக பலர் உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொடூரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் டீஸ்டா சேவல்ட்டின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அத்துடன் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ நிதியையும் டீஸ்டா திரட்டினர். பின்னர் இப்படி நிதி திரட்டியதில் டீஸ்டாவும் அவரது குடும்பத்தினரும் மோசடி செய்துவிட்டதாக புகார் வந்துள்ளது என்று கூறி கடந்த ஆண்டு குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
குஜராத் படுகொலை அம்பலப்படுத்தியதற்காகவே டீஸ்டா மீது பழிவாங்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும் டீஸ்டாவும் அவரது குடும்பத்தினரும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று இருந்தனர். இந்த முன்ஜாமீன் வழக்கின் முடிவில் டீஸ்டாவின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் டீஸ்டா எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஜே முகோபாத்யா மற்றும் என்.வி ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு முன் ஜாமீன் வழங்க தகுதியானதா இல்லையா என்பது குறித்து தனியாக ஆய்வு செய்ய உள்ளோம். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை நாங்கள் ரத்து செய்யபோவது இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு டீஸ்டா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், நாங்கள் முன் ஜாமீன் கேட்டு மட்டுமே கேட்டுள்ளோம் என்றார்
ஆனால் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேக்தா டீஸ்டாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரும் 19-ந் தேதி வரை டீஸ்டாவை கைது செய்ய தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications