தெலுங்கானாவில் தப்பியோட முயற்சித்த 5 "தெஹ்ரீக் கலாபா இ" தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாக 5 தீவிரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வாரங்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரீக் கலாபா இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் முக்கியமானவன் விகரூதீன், குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியவன். ஹைதராபாத்தில் தொடர் தாக்குதல்களையும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை படுகொலை செய்யவும் இவன் திட்டம் தீட்டியிருந்தான்.
இத்தீவிரவாதிகள் 5 பேரும் இன்று வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டனர்.

அப்போது போலீசாரைத் தாக்கி ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட அனைவரும் முயற்சித்துள்ளனர். இந்த மோதலில்தான் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட விகரூதீன், சையத் அம்ஜத், ஹனீப், ஜாஹிர் மற்றும் இர்பான் அலி ஆகிய அனைவருமே தெஹ்ரீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 5 பேரையும் வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றுவதற்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications