'தெலுங்கானாவை' அட்வான்ஸாக உருவாக்கி தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அதிகாரப்பூர்வமாக உருவாகப் போவது என்னவோ ஜூன் 2ந் தேதிதான்.. ஆனால் தேர்தல் ஆணையம் அதற்கு முன்னரே தெலுங்கானா, சீமாந்திரா பகுதிகளுக்கு தனித் தனியே சட்டசபை, லோக்சபா தேர்தல்களை நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் லோக்ச்பா தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார். நாடு முழுவதும் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12 வரை 9 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அத்துடன் ஆந்திரா, ஒடிஸ்ஸா, சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆந்திராவில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

ஏப்ரல் 30ல் தெலுங்கானா தேர்தல்
அதாவது தெலுங்கானா பகுதியில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

மே 7-ல் சீமாந்திரா தேர்தல்
சீமாந்திரா பகுதியில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தனித்தனியே பிரிப்பு
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெலுங்கானா, சீமாந்திரா பகுதிகள் தனித்தனி வண்ணமிடப்பட்டு மாநில வரையறையும் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையர் சம்பத், தற்போது "ஆந்திரா" என்ற மாநிலத்துக்கான தேர்தல் நடைபெற்றாலும் மாநில பிரிவினையின் போது தெலுங்கானாவில் இணையும் தொகுதிகளைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் தெலுங்கானா மாநில பிரதிநிதிகளாக அப்படியே மாறிக் கொள்வர் என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications