இந்திய விமானப்படை பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்தது
இந்திய விமானப் படை பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்தது. எனினும் உயிர் சேதம் இருந்ததாக தகவல்கள் இல்லை.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: இந்திய விமானப் படை பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. எனினும் உயிர் சேதம் இருந்ததாக தகவல்கள் இல்லை.
தெலுங்கானா மாநிலத்தில் இந்திய விமான படை விமானம் ஹைதராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட்டை விமான பயிற்சி மையத்தில் இருந்து இன்று புறப்பட்டது. கீஸாராவில் வானில் வட்டமடிக்கும் பயிற்சிக்காக சென்றது.

அதில் விமானி உள்பட 3 பேர் பயணம் செய்தனர். காட்டு பகுதி அருகே சென்ற போது விமானத்தில் தீப்பிடித்தது. ஆபத்தை உணர்ந்த விமானி உள்பட 3 பேரும் கீழே குதித்து உயிர் தப்பினர்.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் நொறுங்கி விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமான விபத்துக்கான காரணம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications