கணவனைக் கொன்று காதலன் முகத்தில் ஆசிட் வீசி ஆள்மாறாட்டம்... தெலங்கானாவில் நடந்த அடேங்கப்பா க.காதல்!
கணவனைக் கொன்று காதலன் முகத்தில் ஆசிட் வீசி ஆள்மாறாட்டம் செய்த தெலங்கானாவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video

ஹைதராபாத் : கணவனைத் காதலுடன் சேர்ந்து கொன்றுவிட்டு பின்னர் காதலன் முகத்தில் ஆசிட் வீசி ஆள்மாறாட்ட நடகமாடிய தெலங்கானாவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்களை மிஞ்சும் வகையில் நடந்தேறியுள்ள இந்த கொலை, ஆள்மாறாட்ட சம்பவம் உயிரிழந்வரின் குடும்பத்தை அச்சமடையச் செய்துள்ளது.
தெலங்கானாவில் உள்ள நாகர்கூணல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுவாதி என்பவர் திருமணம் செய்துள்ளார். ஆனால் அவருக்கும் ராஜேஷ் என்பவருக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதால் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை
இதன்படி கடந்த நவம்பர் 26ம் தேதி சுதாகர் தூங்கிக் கொண்டிருந்த போது சுவாதியும், அவரது காதலன் ராஜேஷூம் இணைந்து கம்பியால் தலையில் அடித்து சுதாகரைக் கொன்றுள்ளனர். இதனையடுத்து இறந்தவரின் உடலை மசியம்மா காட்டுப் பகுதியில் புதைத்தும் உள்ளனர்.

கணவர் முகத்தில் தீக்காயம் என நாடகம்
இதோடு காரியத்தை முடிக்கவில்லை கணவனுக்கு பதிலாக அந்த இடத்தில் ராஜேஷை கொண்டுவர அடுத்த சதியையும் சுவாதி செய்துள்ளார். காதலர் ராஜேஷ் முகத்தில் ஆசிடை வீசிவிட்டு, தனது கணவர் முகத்தில் தீக்காயம் பட்டுவிட்டதாக அவரது குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.

நம்பிய சகோதரர்கள்
இதனையடுத்து சுதாகரின் சகோதரர்கள் ராஜேஷை தனது அண்ணன் என நினைத்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அவருக்கு முகத்தில் பிளாஸ்டிக் சிகிச்சை செய்வதற்காக சுமார் 5 லட்சம் ரூபாய் வரையிலும் செலவும் செய்திருக்கிறார்கள்.

அதிர்ச்சி கொடுத்த மாமியார்
போட்ட திட்டம் நல்லபடியாக செயல்பட்டு வருவதை நினைத்து சுவாதியும் சந்தோஷத்தில் இருந்துள்ளார். ஆனால் அப்போது தான் அவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது. ராஜேஷின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுதாகரின் தாய் இது தனது மகனல்ல என்று கூறியுள்ளார்.

தாய்க்கு சந்தேகம்
குடும்ப விஷயங்களைப் பற்றி பேச மறுக்கிறான், எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை என்று ராஜேஷ் மீது சுதாகரின் தாய்க்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து சுவாதியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளது.

குற்றத்தை ஒப்புகொண்ட சுவாதி
அப்போது சுவாதி போலீசிடம் நடந்த உண்மைகளை ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சுவாதியின் காதலர் ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் அவரை கைது செய்ய போலீசார் காத்திருக்கின்றனர். இதனிடையே வனப்பகுதியில் இருந்து புதைக்கப்பட்ட சுதாகர் ரெட்டியின் உடலும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications