நடிகை நீத்து மீது போலீஸ் வழக்கு.. வங்கிக் கணக்கையும் முடக்கியது... தீவிர தேடுதல் வேட்டை!
நகரி: செம்மரக் கடத்தல் விவகாரம் தொடர்பாக நடிகை நீத்து அகர்வால் மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது வங்கிக் கணக்கும் முடக்கப் பட்டுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். தற்காப்புக்காக சுட்டதாக ஆந்திர போலீசார் கூறினாலும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர போலீசார் நடத்தி வரும் விசாரணையில், பல முக்கிய புள்ளிகள் சிக்கி வருகின்றனர். அந்தவகையில், இந்த கடத்தல் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த சினிமா நடிகர் சரவணனை சித்தூர் போலீசார் கைது செய்தனர்.

அவர் மூலம் கர்னூல் மாவட்டம் சாசலமரியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், படத்தயாரிப்பாளருமான மஸ்தான் வலி, அவரது சகோதரர் பாபாவலி ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செம்மரக்கடத்தலில் கிடைத்த பணத்தை மஸ்தான் வலி தனது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் வங்கி கணக்கில் போட்டு வைத்து அவர் மூலம் வட மாநில செம்மரக் கடத்தல்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.
நீத்து அகர்வால் மஸ்தான் வலியுடன் அவரது கர்னூல் வீட்டில் குடித்தனம் நடத்தி வந்து உள்ளார். மஸ்தான் வலியை கைது செய்யும் போது வீட்டில் அவரும் இருந்தார். அப்போது போலீஸ் அவரைக் கைது செய்யவில்லை.
ஆனால், மஸ்தான் வலி தன்னைக் குறித்து போலீசில் கூறி விட்ட தகவல் அறிந்த நீத்து அகர்வால், தலைமறைவாகி விட்டார். இதனால் நீத்து மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரைத் தேடி பெங்களூரு மற்றும் மும்பைக்கு விரைந்துள்ளனர்.
வட மாநிலத்தை சேர்ந்தவரான நீத்து மூலம் மஸ்தான் வலி டெல்லி, குஜராத், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் கடத்தல் தொழிலை விரிவுபடுத்தி உள்ளார். எனவே, நீத்துவின் வங்கி கணக்கை முடக்கிய போலீசார் அவரது வங்கி கணக்கில் இருந்து யார் யாருக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது என்று ஆய்வு செய்தனர்.
அப்போது குறுகிய காலத்தில் பாலுநாயக் என்பவருக்கு பெரிய அளவிலான தொகை அனுப்பப்பட்டு உள்ளது தெரிய வந்தது. அதே போல் பாலுநாயக்கும் பெரிய தொகையை நீத்து அகர்வால் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்.
இதையடுத்து பாலு நாயக்கை பிடிக்க போலீசார் வலை விரித்து உள்ளார். பாலுநாயக் வங்கி கணக்கில் தற்போது ரூ.70 லட்சம் வரை உள்ளது தெரியவந்துள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் செம்மரக்கடத்தலில் தொடர்புடைய 15 முக்கிய புள்ளிகள் பட்டியலை சேகரித்து உள்ளனர். இவர்களில் 5 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர்தான் மேற்கு வங்காளத்தில் கைதான சவுந்தரராஜன். சென்னையை சேர்ந்த இவர் தமிழ் தவிர ஆங்கிலம், தெலுங்கு, பெங்கால், இந்தி ஆகிய மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.
மேற்கு வங்காள அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி அவர்களது வீட்டிலேயே செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து பூடான் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தி வந்து உள்ளார்.
சவுந்தரராஜனுடன் தொடர்புடைய மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஆந்திர போலீசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications