உண்டியல் காசில் ஆச்சரியம்.. அதை எடுத்து பார்த்தால்? வியந்த குஜராத் பூரி கோயில்.. யாருப்பா அந்த ஜோடி?
காந்திநகர்: குஜராத் மாவட்டத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.. இன்று காதலர் தினம் என்பதாலோ என்னவோ, இந்த தகவல் இணையத்திலும் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.
வழக்கமாக பொதுமக்கள் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்வார்கள்... அல்லது தங்கள் வேண்டுதலுக்காக கோயிலுக்கு செல்வார்கள். அல்லது பக்தி காரணமாக கோயிலுக்கு செல்வார்கள்.

இதுபோல கோவில்களுக்கு செல்லும்போது, தங்களுடைய வேண்டுதலை, கோரிக்கையை கடவுளிடம் மனமுருகி பிரார்த்தித்து சொல்வார்கள். அந்த வேண்டுதலை ஒரு துண்டு சீட்டில் எழுதி உண்டியலில் சேர்த்து, அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
இப்படி பக்தர்களின் வேண்டுதல் பலவகைகளில் உண்டியலில் சேர்க்கப்படுகிறது.. சிலசமயம், இந்த வேண்டுதல்கள் இணையத்தில் வைரலாகிவிடுவதும் உண்டு. இப்படித்தான் தருமபுரி மாவட்டம், குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணியர் கோவில் நிர்வாகத்தினர், வழக்கம்போல் காணிக்கை பணத்தை எண்ணுவதற்காக உண்டியலை உடைத்துள்ளனர்.
அதில் ஒரு துண்டுச்சீட்டு வந்து விழுந்தது.. அதில் ஒருபக்தர், தனக்கிருக்கும் 1 கோடி ரூபாய் கடன் பிரச்சனையை, விலாவரியாக எழுதி வைத்திருந்தார்.. யார் யாரிடம் கடன் வாங்கினார்? மொத்தம் கடன் எவ்வளவு இருக்கிறது? யாருக்கு பாக்கி உள்ளது? என்பதை எழுதிவைத்து, "காக்க காக்க கனகவேல் காக்க, ,நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடைகள் நீங்க, பார்க்க பார்க்க பாவம் பொடிபட" என்று வரிகளை எழுதி, முருகா முருகா ஓம் முருகா, கடன் அடைய வேண்டும் முருகா என்று எழுதி போட்டிருந்தார்.
என் மாமியார் சாகணும்
இவ்வளவு விலாவரியாக கடன் பிரச்சனையை எழுதியவர், தான் யார்? தன்னுடைய பெயர்? ஊர், முகவரி என எதையுமே சொல்லவில்லை. இந்த கடிதம் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருந்தது.
2 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்திலும் ஒரு ஆச்சரியம் நடந்தது. கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் பாக்யவந்தி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். அங்குள்ள கோயில் உண்டியலை உடைத்து, காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தபோது, 20 ரூபாய் நோட்டு ஒன்று வித்தியாசமாக இருந்துள்ளது. அதை எடுத்து பார்த்தால், "என் மாமியார் சீக்கிரம் இறக்க வேண்டும்" எழுதியிருந்ததாம். இந்த 20 ரூபாய் நோட்டும் இணையத்தில் வைரலானது.
கடிதம் மூலம் இறைவனிடம் வேண்டுதல்
இந்நிலையில், பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலும் இப்படியான வேண்டுதல்கள் வருவதாக கூறுகிறார்கள். அகமதாபாத்தின் 450-வருட பழமையான ஜெகநாத் கோவிலின் ரத யாத்திரை மிகவும் பிரபலம் வாய்ந்ததாகும். இந்த கோயிலில் எழுத்து மூலம் வேண்டி கொண்டால், தங்களின் வேண்டுதல்கள் சீக்கிரம் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
எனவே, திருமணம், வேலை, சொத்து விவகாரம் உள்ளிட்ட தங்களது வேண்டுதலை கடிதமாக எழுதி, நன்கொடை பெட்டியில் பக்தர்கள் போடுவது வழக்கமாகும்.. இந்த கோயிலின் தர்மகர்த்தாவான மகேந்திர ஜா இதுகுறித்து ஒருமுறை சொல்லும்போது, "இறைவனிடம் சமர்ப்பிக்கப்படும் கடிதங்கள் பெரும்பாலும், வேலை வாய்ப்புகளாகவே இருக்கின்றன. சிலர் தங்களின் ஜாகதங்களை சிலர் சமர்ப்பிப்பார்கள்.
வியப்பூட்டும் குழந்தைகளின் கடிதங்கள்
சில கடிதங்கள் வருத்தம் தருவதாக இருக்கும். அதிலும் குழந்தைகளிடமிருந்தெல்லாம் கடிதங்கள் வருகின்றன.. "இறைவா! நாங்கள் எங்கள் பெற்றோர், உறவினர்களுடன் கூட்டுக்குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறோம். எப்போதாவது எங்கள் குடும்பத்துக்கு கஷ்டகாலம் வருமானால், அப்போது நீ தான் எங்களை காக்க வேண்டும்" என்று குழந்தைகள் கடிதம் எழுதும் பாணி எங்களை வியப்பில் ஆழ்த்தும்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
பிப்ரவரி 14 - காதலர்கள் தினம்
இந்நிலையில், இந்த கோயில் உண்டியல் குறித்த மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது.. வழக்கமாக, திருமணத்தடை, வேலை மற்றும் தேர்வில் நல்ல மதிப்பெண் என பல்வேறு கோரிக்கைகளே அதிக அளவில் கடிதங்களாக வருமாம். ஆனால், இந்த கோயிலின் உண்டியலில், "காதல் கைகூட வேண்டும்" என்ற கோரிக்கைதான் மிக அதிகமாக வந்து கொண்டிருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் சொல்கிறார்கள்.
தங்களது காதல் கைகூடி, திருமணத்தில் முடியும்போது, மறக்காமல் திருமண பத்திரிகைகளையும் இந்த உண்டியலில் கொண்டு வந்து அந்த காதல் ஜோடிகள் சேர்த்துவிடுகிறார்களாம்.
வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் என காதலை வளர்ப்பதற்கும், காதலை தெரிவிப்பதற்கும் ஏகப்பட்ட நவீன வசதிகள் இருந்தாலும், மக்களிடையே உள்ள இந்த கோயில் மீதான நம்பிக்கை மட்டும் குறையாமல் உள்ளதையும், கோயில் நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டுகிறார்கள்..!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications