For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறைக்குள் சசிகலா மீது தாக்குதல் நடைபெறலாம்.. உளவுத்துறை வார்னிங்.. பாதுகாப்பு அதிகரிப்பு

நாடகத்தை அரங்கேற்றி, பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறிவிட்டு, தமிழக சிறைக்கு தன்னை மாற்றுமாறு சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அதிமுக பொதுச்செயலர் சசிகலா மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கையை தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் திடீர் மரணம், சசிகலா மீது கோபமாக மக்களிடம் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களிடம். இந்த சூழ்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள தமிழ் பெண் கைதிகள் சிலர் சசிகலாவை தாக்கலாம் என அச்சம் நிலவுகிறது. அப்படி செய்யாவிட்டாலும், சசிகலா தரப்பே திட்டமிட்டு ஒரு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாம்.

Ten constables guard Sasikala in jail fearing she may be attacked

இப்படி நாடகத்தை அரங்கேற்றி, பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறிவிட்டு, தமிழக சிறைக்கு தன்னை மாற்றுமாறு சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாம். நேற்று சசிகலா கோர்ட்டுக்கு வந்தபோது அவருடன் வந்த கார்கள் சில தாக்குதலுக்கு உள்ளாகின. அப்படி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அது சசிகலா தரப்பின் நாடகம் என தெரியவந்தது.

மத்திய உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து சசிகலா அடைக்கப்பட்டுள்ள பகுதியில் 10 பெண் போலீஸ்காரர்கள் எப்போதுமே இருக்கும்படி சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
There is tight security around the cell in which Sasikala Natarajan is lodged. Based on an intelligence report that she should be attacked in jail, ten women constables have been deployed to guard her. The report states that there could be an attack on her, even a stage managed one and hence security around her cell needs to be tight at all times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X