லாக்கர்ல லட்சம் லட்சமாக பணம்.. திறந்து பார்த்தா ஒன்னும் இல்லை.. பதறிப்போன பஞ்சாப் நேஷனல் வங்கி
ஜெய்பூர்: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்றில் வங்கி லாக்கரில் வாடிக்கையாளர் ஒருவர் வைத்திருந்த 2.15 லட்சம் ரூபாயை கரையான்கள் தின்றுள்ளன. வீட்டில் வைத்தால்தான் பாதுகாப்பு இல்லை என்று கருதி வங்கி லாக்கரில் வைத்த நிலையில் அங்கும் பணத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டதை பார்த்து அந்தப் பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வீட்டில் பணத்தை வைத்தால் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்து செல்லக் கூடும் என்று அச்சத்தில் வங்கியில் மக்கள் பணத்தையும் விலை உயர்ந்த ஆபரணங்களையும் சேமித்து வைப்பதுண்டு. இதற்காக வங்கியில் பிரத்யேக லாக்கர் வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த லாக்கரில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுண்டு. தேவைப்படும் நேரத்தில் லாக்கரில் இருந்து எடுத்து மீண்டும் அவற்றை லாக்கரிலேயே பத்திரமாக வைத்துக்கொள்ள முடியும். இந்த லாக்கர் வசதிக்காக வங்கிகள் தனியாக கட்டணமும் வசூலிக்கிறது.

பணத்தை 'சுவாகா' செய்த கரையான்கள்
இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் லாக்கரில் பணத்தை பத்திரமாக வைத்திருந்த பெண் வாடிக்கையாளர் ஒருவரின் பணம் முழுவதையும் கரையான்கள் சுவாகா செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: - ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் உள்ள ஹிரம் மாக்ரி என்ற பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவரது மனைவி சுனிதா மேத்தா. இவர் அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனது பெயரில் ஒரு லாக்கரை எடுத்துள்ளார்.

2.15 லட்சம் பணத்தை
தன்னிடம் உள்ள விலையுர்ந்த பொருட்களையும் பணங்களையும் இந்த லாக்கரில் வைத்திருக்கிறார் சுனிதா. பல மாதங்களுக்கு முன்பே தன்னிடம் உள்ள சுமார். 2.15 லட்சம் பணத்தை வங்கி லாக்கரில் வைத்து பத்திரமாக பூட்டி வைத்துள்ளார். வீட்டில் இருந்தால் பாதுகாப்பு இல்லை என்று வங்கி லாக்கரில் வைத்து பூட்டி விட்டு நிம்மதியாக இருந்த சுனிதா கடந்த வியாழக்கிழமை லாக்கரை திறந்து பார்த்துள்ளார்.

பணத்தை மென்ற கரையான்கள்
திறந்த மறு நிமிடமே சுனிதாவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வைத்திருந்த பணம் முழுவதையும் கரையான்கள் மென்று விட்டன. இதானல், அதிர்ச்சி அடைந்த சுனிதா வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டு இருக்கிறார். அவர்களும் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுனிதா மேத்தா கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் வங்கி லாக்கரை திறந்து பார்த்தேன். அப்போது பணம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால், தற்போது பணத்தை கரையான்கள் தின்று இருக்கின்றன.

பணத்தை மென்ற கரையான்கள்
திறந்த மறு நிமிடமே சுனிதாவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வைத்திருந்த பணம் முழுவதையும் கரையான்கள் மென்று விட்டன. இதானல், அதிர்ச்சி அடைந்த சுனிதா வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டு இருக்கிறார். அவர்களும் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுனிதா மேத்தா கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் வங்கி லாக்கரை திறந்து பார்த்தேன். அப்போது பணம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால், தற்போது பணத்தை கரையான்கள் தின்று இருக்கின்றன.

20 முதல் 25 லாக்கர்களில்
வங்கி நிர்வாகம் கரையான்கள் போன்ற பூச்சி கட்டுப்பாடு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை. அவ்வாறு செய்து இருந்தால் பணம் பாதுகாப்பாக இருந்திருக்கும். வங்கியில் உள்ள 20 முதல் 25 லாக்கர்களில் கரையான்கள் தொல்லை இருப்பதாக வாடிக்கையாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். வங்கி ஊழியர்கள் கரையான்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வு கண்டு இருந்தால் வாடிக்கையாளர்கள் பணத்திற்கு எந்த பாதகமும் வந்திருக்காது. வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் மக்கள் பெரும் மன உளைச்சலுக்கும் நஷ்டமும் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக வங்கி வாடிக்கையாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

உயர் அதிகாரி விளக்கம்
இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர் பிரவீன் குமார் யாதவ் கூறும் போது, "வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து இருக்கிறோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வாடிக்கையாளர்களை மீண்டும் வங்கிக்கு அழைத்து இருக்கிறோம். லாக்கரின் உள்ளே ஈரப்பதம் இருந்ததால் கரையான்கள் பணக்கட்டுகளை தின்றுள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications