பஞ்சாபின் கருப்புத் திங்கள்... அதிகாலையில் உலுக்கிய தீவிரவாதம்: நடந்தது என்ன?
Subscribe to Oneindia Tamil
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டிடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகருக்குள் இன்று அதிகாலை புகுந்த தீவிரவாதிகள் பேருந்து மற்றும் காவல் நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர்.

தினாநகரில் என்ன நடக்கிறது.. ஒரு விரைவுத் தகவல்...
- தீவிரவாதிகள் மாருதி ஆல்டோ காரை திருடியுள்ளனர். அவர்கள் ராணுவ உடை அணிந்துள்ளனர்
- ஜம்மு செல்லும் மாநில அரசு பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார்.
- பேருந்தை தாக்கிய பிறகு தீவிரவாதிகள் தினாநகர் காவல் நிலையத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்
- தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர், 2 போலீசார் பலியாகியுள்ளனர்
- தீவிரவாதிகள் காவல் நிலையம் அருகே உள்ள காலி கட்டிடத்தில் பதுங்கியுள்ளனர்
- தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டிடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்
- தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்
- ராணுவ வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தீவிரவாதி ஒருவர் பலியானார்
- அந்த கட்டிடத்தில் 3 முதல் 5 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது
- குர்தாஸ்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் 5 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது
- குர்தாஸ்பூரில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன
- தீவிரவாதிகளை பிடிக்க நடந்து வரும் ஆபரேஷனுக்கு துணையாக ராணுவ ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன
- தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள நாரோவல் பகுதியில் இருந்து வந்துள்ளனர்
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications