தீவிரவாதம் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதே, இந்தியாவில் தோன்றியதல்ல: பிரணாப்
டெல்லி: இந்தியாவில் தீவிரவாதம் என்பது இந்தியாவில் தோன்றியதில்லை. இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாகும். இந்திய முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது என்பது கிட்டத்தட்ட கிடையாது. அப்படியே இருந்தாலும் அது நிராகரிக்கக் கூடிய அளவுக்கு மிக மிக சொற்பமான அளவேயாகும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பிரணாப், முன்னதாக அந்த நாட்டு ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பிரணாப் முகர்ஜி கூறியதாவது: இந்தியாவில் உருவானதல்ல தீவிரவாதம். இது வெளியிலிருந்து இறக்குமதியானது.
இந்திய முஸ்லீம்களின் எண்ணிக்கை 15 கோடியாகும். இதில் ஒருவர் அல்லது இருவர் வேண்டுமானால் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர்.

தீவிரவாதம் வெளியில் இருந்துதான் இந்தியாவில் ஊடுருவுகிறது. உள்நாட்டில் ஒருபோதும் தீவிரவாதம் உருவாவதில்லை. அப்படியே தோன்றினாலும் கூட அதன் அறிகுறிகள் தென்படும்போதெல்லாம் கடும் நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்தை வேரோடு களைந்து வருகிறோம்.
தீவிரவாதிகளுக்கு மதம், நாட்டுப்பற்று கிடையாது. அவர்களின் ஒரே நோக்கம், அழிவு, நாசம், மனிதர்களுக்கு எதிராக தீங்கு செய்வது மட்டுமே. தீவிரவாதம் 'இவரால்' செய்யப்பட்டால் தவறு, 'அவரால்' செய்யப்பட்டால் சரி என்று யாரும் கூற முடியாது. தீவிரவாதம் எங்கிருந்தாலும் தவறுதான்.
தீவிரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே தீவிரவாதத்தை ஒழிக்க உரிய வழிமுறையாகும். நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்று பிரித்துப் பார்ப்பதே அர்த்தமற்றது.
இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியாதான்.
அண்டை நாட்டுடன் பிரச்சினை இருக்கும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை, இருமுறை வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டுள்ளேன். அதே நேரம், சுதந்திரத்துக்கு பிறகு படிப்படியாக இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட்டு வந்துள்ளதை மறுக்க முடியாது.
சிம்லா மற்றும் லாகூர் ஒப்பந்தங்களின்படி நடந்து கொண்டாலே இந்த பிரச்சினைகளில் பல குறையும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications