காஷ்மீர் மருத்துவமனையில் பயங்கரம்.. போலீசாரை சுட்டுக்கொன்று பாக். கைதியை கடத்திய தீவிரவாதிகள்
காஷ்மீரில் பாகிஸ்தான் கைதி நவீத்தை மீட்க தீவிரவாதிகள் மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் கைதி நவீத்தை மீட்க தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பாகிஸ்தானை சேர்ந்த கைதி நவீத் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மருத்துவமனைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சிகிச்சை பெற்று வந்த கைதி நவீத்தை மீட்க நடத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு காவலரை சுட்டுக்கொன்று தீவிரவாதி நவீத் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டான். மேலும் அவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதிக்கு விரைந்த ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு மீட்டர் இடைவெளிக்கும் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் காஷ்மீரில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015ம் ஆண்டு காஷ்மீரின் தெற்கு பகுதியில் சுற்றித்திரிந்த நவீத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications