ஜம்மு விமான படைதளம்: ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்து டிரோன் தாக்குதல்? முதல் கட்ட விசாரணையில் தகவல்
ஜம்மு: ஜம்மு விமான படைதளத்தில் ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்தே டிரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக் கூடும் என பாதுகாப்பு படையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய எல்லையில் தீவிரவாத குழுக்களுக்கு டிரோன்கள் மூலம் இதுவரை ஆயுதங்களை வீசிவந்தது பாகிஸ்தான். தற்போது ஜம்மு விமான படை தளம் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டிரோன்கள் மூலம் குறைவான சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதில் கட்டிட மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. மேலும் 2 விமானப் படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் மூலம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்ட பகுதியை வைத்து பார்க்கும் போது, ராணுவ ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
