ஜம்முவில் பதற்றம்... விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

ஜம்முவில் பதற்றம்... விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரின் மலங்புராவில் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த சனிக்கிழமை புகுந்து குடியிருப்புப் பகுதிகளில் பதுங்கி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்தக் குடியிருப்பை சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்திய ராணுவத்தினர், தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

Terrorists fire upon guards at Air Force Station in Kashmir's Malangpora

இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகாரிகள் இரண்டுபேர் உள்பட ராணுவத்தினர் ஆறுபேரும் பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து சி.ஆர்.பி.எஃப் முகாமிற்குள் கடந்த இரு தினங்களுக்கு முன் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை தடுக்க முயன்ற வீரர் ஒருவர் சுடப்பட்டு உயிரிழந்தார். அந்தத் தீவிரவாதிகள், அருகிலிருந்த பழைய வீடு ஒன்றில் புகுந்தனர். பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றிவளைத்து, தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் மலங்புராவில் உள்ள விமானப் படை தளம் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+