10 நகரங்களில் நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டம்- சென்னைக்கும் எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உஷாராக இருக்குமாறும் அது உஷார்படுத்தியுள்ளது.
10 நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நகரங்களில் தீபாவளியையொட்டி தாக்குதல் நடைபெறலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாளை தீபாவளி
நாளை நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்கள் கடைசி நேர பர்ச்சேஸில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

3 நாள் கொண்டாட்டம்
தமிழகத்தில் தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம்தான். ஆனால் சில மாநிலங்களில் 3 நாள் கொண்டாட்டமாக இது நடைபெறும்.

தீவிரவாதிகள் சதிச் செயல்
இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் நாசவேலைக்குத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

எங்கெங்கு வாய்ப்பு
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், நாக்பூர், புனே, ஹைதராபாத், அகமதாபாத், வதோதரா ஆகிய 10 நகரங்களில் கலவரத்தை தூண்ட தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களில்
இந்த நகரங்களில் உள்ள புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் நாசவேலையை நிகழ்த்த தீவிரவாதிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உஷார் உஷார்
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுளை மத்திய உள்துறை தொடர்பு கொண்டு, தீபாவளி பண்டிகை நாட்களில் மிக, மிக உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநிலங்களில் போலீஸார் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications