தானேவில் மருமகளை நிர்வாணமாக்கி, தலையை மொட்டையடித்த உயர் ஜாதி மாமனார், மாமியார்
தானே: தானேவில் தங்களின் விருப்பத்திற்கு எதிராக தங்களின் மகனை திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தலையை மொட்டையடித்த மாமனார், மாமியார் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் உயர் ஜாதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்தார். யோகேஷின் வீட்டில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் யோகேஷின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அவர்கள் பிவான்டி தாலுகாவில் உள்ள பாலி கிராமத்தில் இருக்கும் அந்த பெண்ணின் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அந்த தம்பதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் யோகேஷின் குடும்பத்தார் அவர்களை வலுக்கட்டாயமாக மைதேவில் உள்ள தங்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வீட்டு வாசலில் இளம் ஜோடியை அவர்கள் கட்டிப்போட்டனர். அவர்கள் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, தலையை மொட்டயைடித்து தாக்கினர். இதை யோகேஷின் சகோதரர் ஒருவர் செல்போனில் படம் எடுத்துவைத்து இதை யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மைதே கிராமத்து தலைவர் சந்தோஷ் பாட்டில் சம்பவ இடத்திற்கு வந்து இளம் ஜோடியை மீட்டு பாட்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். யோகேஷை திருமணம் செய்ததால் தன்னை தனது மாமனார், மாமியார் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியதாக அப்பெண் நேற்று புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் யோகேஷின் பெற்றோர் மதுகர் பாட்டில், மால்டி பாட்டில் மற்றும் அவரின் அண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications