மீண்டும் பலாத்கார மிரட்டல்... கயவர்களிடமிருந்து காப்பாற்ற மகளுக்கு மொட்டையடித்த அபலைத் தாய்!
தானே: தொடர் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற, பெற்ற மகளுக்கு தாயே மொட்டையடித்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்வா சேரிப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இரு நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். அச்சிறுமி திறந்த வெளியில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற போது இந்த பலாத்காரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். சிறுமியின் தாயாரைச் சந்தித்த அவர்கள், தங்கள் மீதான புகாரை வாபஸ் பெறும் படி அவரை மிரட்டியுள்ளனர். புகாரை வாபஸ் வாங்காவிட்டால், அச்சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்வோம் எனவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த அபலைத் தாய், தனது மகளின் தலையை மொட்டை அடித்துள்ளார். ஏனெனில், தன் மகள் அழகாக இருந்ததாலேயே முன்னர் அவர் பலாத்காரத்திற்கு ஆளானதாகவும், தற்போது முடியை இழந்து அலங்கோலமாக இருப்பதால் அவரை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்த மாட்டார்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பாலியல் கொடுமைகளில் இருந்து தப்பிக்க, பெற்ற தாயே மகளுக்கு மொட்டையடித்து அலங்கோலப் படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications