கர்நாடக சட்டசபை தேர்தல்.. தமிழர்கள் அதிகம் வசிக்கும் 2 தொகுதிகளில் அதிமுக போட்டி
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தியா டுடே சமீபத்தில் வெளியிட்ட கருத்து கணிப்பில், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றபோதும் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வசிக்கும், பெங்களூரின் காந்திநகர் சட்டசபை தொகுதி மற்றும், கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயல் (கேஜிஎப்) ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் அதிமுக செயலாளராக இருந்த புகழேந்தி, தினகரன் அணியில் உள்ளதால், அம் மாநிலத்தின் அதிமுக செயலாளராக எம்.பி. யுவராஜ், இணைச் செயலாளராக எஸ்.டி. குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஏற்கெனவே பெங்களூர் மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முனியப்பா வெற்றிவாகை சூடினார். இதன்பிறகு அதிமுக சார்பில் இத்தொகுதியில் பலர் போட்டியிட்டாலும் மோசமான தோல்வியையே ஈட்டியுள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல்: பெங்களூர் தொகுதிகள்- ஒரு பார்வை
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications