பெங்களூரில் பெண் நடத்துனர் மீது சரமாரித் தாக்குதல்.. படியில் தொங்கிய மாணவர் ஆத்திரம் !
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூருவில் பேருந்து படியில் தொங்கியவாறு பயணித்ததை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர் பெண் நடத்துனரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஜலகாவள்ளியில் இருந்து கியார்புரம் சென்ற மாநகர பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவன் பயணித்தான். அவரை பேருந்து நடந்துனர் உள்ளே வருமாறு பணியில் இருந்த பெண் நடத்துனர் அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கங்கமன்குடி என்ற இடத்தில் பேருந்து நின்ற போது நடத்துனரை கீழே தள்ளிவிட்டு நடுரோட்டில் சரமாரியாக தாக்கினார். தற்காப்புக்காக பெண் நடத்துனரும் எதிர் தாக்குதல் நடத்தினார்.

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications