அமெரிக்க விமானத்தில்.. நடுவானில் ஆப்கான் பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் பெயர் 'ரீச்'

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து ஜெர்மனிக்கு பறந்த பெண்ணுக்கு நடுவானில் பிறந்த குழந்தைக்கு 'ரீச்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரை தாலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர்.

Recommended Video

    நடுவானில் பிறந்த குழந்தைக்கு பெயர் ரீச்… விமானத்தின் அடையாளம் என பெற்றோர் பெருமிதம்

    அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்கானோர் அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

    தாலிபான்கள் பெண்களை மிக மோசமாக நடத்துவார்கள் என்று பழைய வரலாறு கூறுவதால் ஆப்கானில் இருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

    சவாலாக இருக்கிறது

    சவாலாக இருக்கிறது

    இதனால் காபூல் விமான நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படுகிறது. பலர் முண்டியடித்து வருவதால் மக்களை வெளியேற்றுவதில் அங்கு பாதுகாப்புக்காக நிற்கும் அமெரிக்க படைகளுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஜெர்மனியின் ராம்ஸ்டீன் விமானப்படை தளத்திற்கு சி -17 ராணுவ விமானம் சென்றது.ஆப்கானில் இருக்கும் அகதிகளை அந்த விமானம் அழைத்து சென்றது.

    குழந்தை பிறந்தது

    குழந்தை பிறந்தது

    அந்த விமானம் நடுவானில் பறந்தபோது அதில் இருந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து
    ராம்ஸ்டீன் விமானப்படை தளத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ராணுவ மருத்துவ பணியாளர்கள் விமானத்தின் சரக்கு பெட்டக பகுதியில் வைத்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர்.

    மகிழ்ச்சி வெள்ளம்

    மகிழ்ச்சி வெள்ளம்

    பின்னர் விமானம் தரை இறங்கியவுடன் அங்கு தயாராக இருந்த மருத்துவர்கள் தாயையும், சேயையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண்ணுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததால் விமானத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக விமானத்திற்குள் காற்றழுத்தம் குறைவாக இருந்ததால், அந்தப் பெண்ணுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், காற்றழுத்தத்தை சீராக்க, விமானி விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்துள்ளார். இது அந்தப் பெண்ணின் உயிரைக் காக்க உதவியிருக்கிறது என்று அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.

    குழந்தையின் பெயர் 'ரீச்'

    குழந்தையின் பெயர் 'ரீச்'

    இந்த நிலையில் அந்த குழந்தைக்கு 'ரீச்' என்று பெற்றோர்கள் பெயரிட்டுள்ளனர் அந்த பெண் குழந்தை விமானத்தில் பிறந்தது என்பதால் அந்த அனுபவம் எதிர்காலத்தில் குழந்தைக்கு நினைவில் இருக்கும் வகையில் 'ரீச்' என்று பெயரிட்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். போக்குவரத்து விமானத்தின் அடையாளம் 'ரீச் 828' என்பதால் பெற்றோர்கள் அவளுக்கு 'ரீச்' என்று பெயரிட முடிவு செய்தனர் என்று விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+