அசாமில் அசத்தல் வெற்றி பெற்ற பாஜக.. போட்டி அளிக்காமல் அடிபணிந்த காங்கிரஸ்!
கவுகாத்தி: அசாமில் பாஜக 75 இடங்களில் அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் 50 இடங்களில் வெற்றி பெற்றது.
இதனால் அசாமில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.

அசாம் தேர்தல்
123 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டன. தற்போது வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பாஜக அதிரடி வெற்றி
பாஜக அசாமில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அதாவது அசாமில் பாஜக 75 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மோடி பிரசாரம்
அசாமில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பலகட்டமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இது பாஜகவுக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. அசாமில் மத்திய அரசின் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

போராட்டத்தை மீறி வெற்றி
ஏராளமான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் இந்த தேர்தலில் இது எதிரொலிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இதை எல்லாம் மீறி பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. அசாமில் வெற்றி பெற்ற போதிலும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications