For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேச பக்தியை அதிகரிக்க சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த முடிவு.. மத்திய அரசின் புதிய திட்டம்

சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களின் உதவியை நாட முடிவெடுத்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களின் உதவியை நாட முடிவெடுத்துள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கண்காணிப்பில் இந்த தனியார் நிறுவனம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பேசும் ஒவ்வொரு விஷயமும் கவனிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம் மக்களுக்கு தேசிய உணர்வை அதிகப்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தேச அபிமானம்

தேச அபிமானம்

இதன் மூலம் மக்களுக்கு தேசிய பக்தியை அதிகரிக்க முடியுமே என்று மத்திய அரசு கூறியுள்ளது. மக்களுக்கு பிற நாட்டை விட அவர்கள் வசிக்கும் மாநிலத்தை தேசிய பக்தியை அதிகரிக்க இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதேபோல் அரசுக்கு எதிரான கருத்துக்களும் இதன் மூலம் குறையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

இதற்கு மத்திய அரசு ஒரு திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் வரும் தேசத்திற்கு எதிரான போஸ்டுகளையும், அரசுக்கு எதிரான போஸ்டுகளையும் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதற்கு பதிலாக அரசை ஆதரிக்கும், தேச பக்திக்கு ஆதரவான கட்டுரைகளை மட்டும் சமூக வலைதளங்களில் அதிக பேர் பார்க்கும் படி செய்ய உள்ளது. இதன் மூலம் எதிர்மறையான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்க்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

நிறுவனம்

நிறுவனம்

இதற்காக தனியார் நிறுவனத்தின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. இன்னும் எந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. ஆனால் புதிய நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து இது போல சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த வேலையை கவனிக்க நிறைய புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

பொய்யான செய்தி தடுப்பு

பொய்யான செய்தி தடுப்பு

ஏற்கனவே பொய்யான செய்தி வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால் எதிர்ப்பு காரணமாக அந்த சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டது. ஆனால் இந்த புதிய திட்டத்தின் மூலம் பொய்யான செய்திகளை கட்டுப்படுத்த இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கும் தனியார் நிறுவனம் எல்லா செய்திகளையும் கண்காணித்து, தவறான செய்திகளை மக்களுக்கு சென்று சேராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

English summary
The central government decides to control social media to increase patriotism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X