மேற்குவங்க சட்டசபைத் தேர்தல்: 43 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் !
கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபைக்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 6 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்குவங்க மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி மே 5-ந் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 90 இடங்களில் போட்டியிடுகிறது.
மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மனாஷ் புனியா, மேற்கு மிட்னாபூரின் சபாங்க் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது எம்.எல்.ஏ-க்களாக உள்ளவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இடதுசாரி முன்னணி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் டி.பி.ராய் நிராகரிக்கப்பட்டார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications