கேரளப் பிரச்சாரத்தில் வான் மழையில் நனைந்த ராகுல்... தொண்டர்கள் மனதில் சாரல்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் ராகுல் நடந்து கொண்ட விதம் அவர்களது கட்சித் தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.
நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் ஆற்றிங்கல், செங்கனூர், காசர்கோடு, ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, பலத்த மழை பெய்ததால் நாற்காலிகளைக் குடைகளாக்கிய படி ராகுல் பேச்சை ரசித்தனர் தொண்டர்கள். ஆனால், விடாது பெய்த மழையிலும் அசராது நனைந்த படியே தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் ராகுல்.
மேலும், மழையில் நனைந்தபடியே தொண்டர்கள் அருகில் சென்ற ராகுல் அவர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதனால், நேற்று மாலை சுமார் 3.30 மணிக்கு ஆற்றிங்கல் தொகுதியில் பேசுவதாக இருந்த பிரச்சாரக்கூட்டம், காலதாமதமாக 6.20 மணிக்கு தொடங்கியது.
அதேபோல், ஆற்றிங்கல் கூட்டத்தில் ராகுல்காந்தியின் ஆங்கில பேச்சை சசிதரூர் மலையாளத்தில் மொழி பெயர்த்தார். அப்போது அவரது மைக் வேலை செய்யவில்லை. உடனே ராகுல்காந்தி, சாதாரண தொண்டரை போல் தனது முன்பு இருந்த ஒரு மைக்கை சசிதரூருக்கு கொடுத்து அவர் பேச உதவினார்.
செங்கனூர் கூட்டத்தில் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோதி விஜயகுமார் பேசும்போது, அவரது மைக்கையும் அவர் பேசுவதற்கு வசதியாக ராகுல்காந்தி சரிசெய்தார். இதற்காக ஜோதி தனது நன்றியை ராகுலுக்கு தெரிவித்தார். ராகுல்காந்தியின் எளிமையை பார்த்து கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.
கடந்தமுறை ராகுல் கேரளா வந்தபோது, திரண்ட கூட்டத்தைவிட இந்த முறை அதிக அளவில் மக்கள் திரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications