வைர வியாபாரம்.. கோடிக்கணக்கில் சொத்து.. எல்லாம் துறந்து.. 8 வயசிலேயே துறவியான குஜராத் சிறுமி.. ஏன்?
காந்திநகர்: குஜராத்தின் புகழ்பெற்ற வைர வியாபாரியின் மகள் ஒருவர் சமண மதத்தில் துறவம் மேற்கொண்டுள்ளார். சூரத் நகரில் இன்று அவர் 'திக்ஷா' எடுத்து துறவறத்தில் நுழைகிறார்.
உலகின் பழமையான மதங்களில் சமண மதமும் ஒன்று. இம்மதம் மனிதர்களின் வாழ்க்கையை இரண்டாக பார்க்கிறது. ஒன்று துறவம் மற்றொன்று இல்லறம். இல்லற வாழ்க்கையானது மற்ற மதங்களில் இருப்பதை போன்று எளிதானதன்று. இவர்கள் 5 விஷயங்களை இல்லற வாழ்க்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொல்லாமை, வாய்மை, பிறர் பொருளை திருடாமை, பிறர் மனைவியை நோக்காமை, பொருட்கள் மீது அளவற்ற பற்று இல்லாமை ஆகியவைதான் இல்லறத்தில் இருக்கும் சமணர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அதேபோல துறவம் மேற்கொள்ளும் சமணர்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி கடும் தவம் மேற்கொள்வார்கள். இவர்கள் சில குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் ஒரே இடத்தில் தங்கி இருக்க மாட்டார்கள். தொடர்ந்து ஊர் ஊராக பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் இந்த துறவறத்தில் நுழைவதற்கு கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும். தற்போது குஜராத்தின் 'சங்வி அண்ட் சன்ஸ்' நிறுவனத்தின் பல கோடி ரூபாய் சொத்துக்களின் அதிபதியாக உள்ள தனேஷ் சங்வியின் மூத்த மகள் இந்த துறவறத்தில் நுழைகிறார்.

வைர வியாபாரியின் மகள்
தனேஷ் சங்விக்கு இரண்டு மகள் இருக்கின்றன. மூத்த மகள் பெயர் தேவன்ஷி சங்வி. இவருக்கு 8 வயதுதான் ஆகிறது. ஆனாலும் துறவறத்தை மேற்கொள்வதில் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார். 'சங்வி அண்ட் சன்ஸ்' நிறுவனம் ஒரு பழமையான வைர வியாபார நிறுவனமாகும். இன்றை தேதியில் இந்நிறுவனத்தினுடைய ஒரு பங்கின் விலை ரூ.26 என்கிற அளவில் இருக்கிறது. மட்டுமல்லாது நிறுவனத்திற்கு சொந்தமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன. இந்நிறுவனத்தை தற்போது நடத்தி வரும் தனேஷ் சங்வி தனக்கு அடுத்து தன்னுடைய மூத்த மகள் தேவன்ஷி சங்விதான் நிறுவனத்தினுடைய வாரிசாக நியமித்துள்ளார்.

துறவம்
ஆனால் மூத்த மகள் தேவன்ஷி சங்வி, துறவியாக சேவை செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். துறவறம் மேற்கொள்வதற்கு முன்னர் ஒரு சடங்கு நடைபெறும். அந்த சடங்கின் மூலம்தான் துறவறம் மேற்கொள்பவர்கள் எவ்வளவு மன உறுதியுடன் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். இந்த சடங்கில் துறவறம் மேற்கொள்பவர்களின் தலைமுடி ஒவ்வொன்றாக வெறும் கைகளால் பிடுங்கி எடுக்கப்படும். இது நாம் நினைப்பதைப்போல எளிதானது கிடையாது. பலர் இதற்காகவே துறவறம் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். தற்போது தேவன்ஷி சங்விக்கு இந்த சடங்குகள் இன்று நடைபெறும். இதற்கடுத்து இவர் துறவி பயணத்தை தொடர்வார்.

சிறு வயதிலிருந்தே..
வழியில் இவருக்கு என தங்குவதற்கு சில இடங்கள் ஏற்பாடு செய்யப்படும். பெரும்பாலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பணக்கார சமண மதத்தை சேர்ந்தவரின் இல்லத்தில் இவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். ஆனால் தங்குவதற்கு இடமே இல்லையென்றாலும் கூட சிறிய குடில்களில் கூட தங்க தயங்க மாட்டார்கள். எல்லா இடத்திலும் இவர்களின் மன நிலைமை ஒரே மாதிரிதான் இருக்கும். அதுவே தவத்தின் பலம். தனது மகள் துறவறம் மேற்கொள்வது குறித்து தேவன்ஷியின் தாயார் அமி பெருமை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தேவன்ஷி சிறு வயதிலிருந்தே ஒரு நாளைக்கு மூன்று முறை கடவுளை தொழ தொடங்கிவிட்டாள். இவள் வயது வந்த உடன் எங்கள் நிறுவனத்திற்கு அதிபதியாக ஆகியிருப்பாள். ஆனால் துறவம் மேற்கொள்வதில்தான் அவளுக்கு விருப்பம்" என கூறியுள்ளார்.

பயணம்
இன்று இச்சிறுமி துறவறம் மேற்கொள்ள உள்ள நிலையில் நேற்று யானைகள், ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளுடன் பிரமாண்டமான ஊர்வலம் நேற்று நடத்தப்பட்டிருக்கிறது. இன்று துறவறம் மேற்கொண்ட பின்னர் சிறுமி தேவன்ஷி மற்ற துறவிகளுடன் சேர்ந்து சுமார் 600 கி.மீ வரை நடைப்பயணம் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications