ஒரே ஒரு பெண் பயணியுடன் டெல்லியில் இருந்து 535 கிலோமீட்டர் வந்த ரயில்.. என்ன காரணம்?
ராஞ்சி: டெல்லியில் இருந்து ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை ராஞ்சி நகருக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது..
Recommended Video
டோரி சந்திப்பில் டானா அமைப்பினர் நடத்திய போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலையல் மாற்றுப்பாதையில் பல மணி நேரம் கழித்து வெள்ளிக்கிழமை காலை ராஞ்சியை அந்த ரயில் வந்தடைந்தது.
வியாழக்கிழமை காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில், டால்டோன்கஞ்ச் பகுதியில் நடந்த போராட்டம் காரணமாக ரயில் மேற்கொண்டு இயங்காமல் பாதி வழியில் நின்றது.

ரயிலில் பெண்
அதில் இருந்த 930 பயணிகளும் பேருந்து மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால், ஒரே ஒரு பெண் பயணி அனன்யா, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த மாற்றுப் போக்குவரத்தை ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன் தான் ரயிலிலேயே செல்வேன் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

ஒரு பயணியுடன் 535 கிமீ பயணம்
ரயில் பயணத்துக்குக் கட்டணம் செலுத்து உள்ளதாகவும், பேருந்தில் பயணிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால், ரயில் அதிகாரிகள் வேறுவழியில்லாமல் சட்டக் கல்லூரி மாணவி அனன்யாவை ரயிலில் கோமோ மற்றும் பொகாரோ வழியாக 535 கிலோ மீட்டர் பயணித்து ராஞ்சிக்கு அழைத்து சென்றனர். வழக்கமான பாதையை விட 225 கி.மீ. தூரம் ரயில் சுற்றி வந்து சேர்ந்துள்ளது.

என்ன சொல்கிறார் அனன்யா
இது குறித்து அனன்யா கூறும் போது, என்னை பேருந்து அல்லது கார் மூலம் ராஞ்சி செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், நான் ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறேன். நான் ஏன் பேருந்தில் செல்ல வேண்டும் என்று கேட்டேன். இறுதியாக இந்திய ரயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில் இது பற்றி நான் புகார் தெரிவித்தனர், இதையடுத்தே நான் ராஞ்சிக்கு ரயிலில் வந்தடைந்தேன் என்றார்

ஏன் இப்படி நடந்தது
இது தொடர்பாக ரயில் அதிகாரிகள் கூறுகையில், டோரி சந்திப்பில் நடந்த போராட்டத்தால் மேற்கொண்டு ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. , மாவட்ட நிர்வாகமே பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் பேருந்தில் செல்ல அந்த பெண் மறுத்துவிட்டார். ஒவ்வொரு பயணியும் அவர்கள் செல்லுமிடத்திற்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வேயின் கடமை. அதனால்தான் பேருந்தில் செல்ல மறுத்த பெண்ணை மாற்றுப் பாதையில் ரயிலில் ராஞ்சிக்கு அனுப்பி வைத்தோம். சுமார் 15 மணி நேரம் தாமதமாக ராஜ்தானி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.45க்கு ராஞ்சி சென்றடைந்தது என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications