சுதந்திர இந்தியாவில் பதிவான மோசமான ரயில் விபத்துக்களில் இதுவும் ஒன்று.. இதோ புள்ளி விவரங்கள்
ஒடிசா: பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் சுமார் 233 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் நடந்துள்ள இந்த விபத்து, சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற கோரமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.
அதேபோல பெங்களூரிலிருந்து புறப்பட்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், பத்ராக் ரயில் நிலையத்தை கடந்து பல்சோர் வந்து சேரவில்லை. இதேபோல சரக்கு ரயில் ஒன்றும், இதுபோன்று அடுத்த ரயில் நிலையத்தை வந்து சேராமல் இருந்துள்ளது. இதனையடுத்து சந்தேகம் அதிகரித்ததை தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அப்போதுதான் இந்த கோர விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க தொடங்கியுள்ளனர். உதவிக்கு விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சுதந்திர இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட கோர ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளன.
கடந்த 1964ம் அண்டு, டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று பாம்பன்-தனுஸ்கோடி பயணிகள் ரயில் ஒன்று அப்போது வீசிய சூறாவளியில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் பயணித்த பயணிகளில் 126 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல, கடந்த 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று பீகார் மாநிலத்தில் மான்சி மற்றும் சகார்சா இடையே சுமார் 800க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் ஒன்று பாக்மதி எனும் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் மீட்பு பணிகளில் ஏற்பட்ட தோய்வு காரணமாக சுமார் 750க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். முதல் கட்டமாக 200 உடல்களை மீட்கவே 5 நாட்கள் வரை தேவைப்பட்டது.
இதற்கடுத்து கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி புது டெல்லியிலிருந்து பூரி சென்றுக்கொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் சுமார் 305 பயணிகள் வரை உயிரிழந்தனர்.
அதேபோல கடந்த 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்கத்தாவிலிருந்து ஜம்மு நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயில் ஏற்கெனவே தடம் புரண்டு இருந்த ஃபிராண்டியர் கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலின் பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பஞ்சாப் மாநிலத்தின் கன்னாவில் நடைபெற்றது.
மற்றொரு கோரமான விபத்த அடுத்த ஆண்டே (1999) ஆகஸ்ட் மாதம் 2ம் தேதியன்று நிகழ்ந்தது. மேற்கு வங்கத்தின் கைசல் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது, பிரம்மபுத்திரா மெயில் மோதியது. இதில் 285 பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் சோகம் என்னவெனில், உயிரிழந்தவர்களில் கணிசமானவர்கள் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினராவார்கள்.
இதனை தொடர்ந்து 2002ம் ஆண்டும் மற்றொரு கோர விபத்து பதவு செய்யப்பட்டது. ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்சில் தாவே ஆற்றின் பாலத்தின் மீது தடம் புரண்டதில் 140 பேர் உயிரிழந்தனர். இது ஒரு சதி செயல் என்றும், இதற்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்றும் பின்னர் தெரிய வந்தது.
அதன் பின்னர் 8 ஆண்டுகள் வரை வேறு எந்த கோர விபத்தும் பதிவாகவில்லை. ஆனால் 2010ம் ஆண்டு நடந்த மற்றொரு விபத்து 148 பயணிகளை பரிதாபமாக பலி வாங்கியது. இந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதியன்று மும்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ், ஜார்கிராம் அருகே தடம் புரண்டது. இதன் பெட்கள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன. இந்நிலையில் எதிரே வந்த சரக்கு ரயில் இந்த பெட்டிகள் மீது மோதியதில் 148 பேர் உயிரிழந்தனர்.
இதற்கடுத்து 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதியன்று மற்றொரு விபத்து பதிவானது. உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள புக்ராயனில், இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 260 பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications