வியாபார தகராறு.. கர்நாடகாவில் கிரிக்கெட் பேட்டால் அடித்து இளைஞர் கொலை!
கர்நாடகாவில் வியாபார தகராறு காரணமாக இளைஞர் ஒருவர், கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
பெங்களூரு: கர்நாடகாவில் வியாபார தகராறு காரணமாக இளைஞர் ஒருவர், கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் மண்டியா அருகே இருக்கும் சோழதேவனஹள்ளி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை ச சேர்ந்த 42 வயது பெண் மற்றும் அவரது 20 வயது மகன் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் இடைதரகர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் மண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த பின்பு உடலை அங்கு இருக்கும் கால்வாய் ஒன்றில் இருவரும் சேர்ந்து புதைத்து இருக்கின்றனர்.

கொலை செய்தது யார்??
இந்த கொடூர கொலையை செய்த தாய் ஜுபீனா மற்றும் அவரது மகன் ரோஷன் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீஸ் கைது செய்ய வருவதை அறிந்த ஜுபீனா தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் போலீசாரால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யார் இந்த பஷீர்?
கொல்லப்பட்ட நபர் பஷீர் அஹ்மத் அங்காடி (வயது 35 ) என்ற அங்கன்வாடி தரகர் ஆவார். திருமணமகாத பஷீர், இலியாஸ் என்பவருடன் சேர்ந்து பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலை தன் வீட்டருகே செய்து வந்தார். இலியாஸ்தான் கொலையாளி ஜுபீனாவின் கணவர். பஷீர் மீது மிகுந்த அன்பும் அரவணைப்பையும் கொண்டு இருந்தார் இலியாஸ். இவர்கள் உறவு நன்றாகவே இருந்துள்ளது.

காணவில்லை
பிசினஸ் ட்ரிப் முடிந்து வீடு திரும்பிய இலியாஸ், பஷீர் எங்கே என்று தன் மனைவி ஜுபீனாவிடம் கேட்க, வேலைக்கு போன பஷீர் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை என்று கூறி இருக்கிறார். இதனை அறிந்த இலியாஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் வந்து விசாரணை தொடங்க இலியாஸின் ஜுபீனா மற்றும் ரோஷன் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் போலீசுஸ்க்கு சந்தேகம் அதிகரித்தது.

தற்கொலை
எங்கே நாம் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் ஜுபீனா 30 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் போலீசாரால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . இந்நிலையில் போலீசார் கால்வாயில் உள்ள பஷீரின் உடலை கண்டறிந்தனர். அதன் பின்னல் ரோஷனை பிடித்த போலீஸ் மேலும் விசாரிக்க, நானும் என் அம்மாவும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாக ஒப்பு கொண்டனர்.

கொலை செய்தது யார்??
தன் தந்தை இலியாஸ் பஷீர் மீது காட்டிய அன்பும் ஆதரவும் தங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றுள்ளனர். மேலும், தொழில் லாபத்தில் பங்கு கேட்டதற்காகவும் பஷீரை தன் வீட்டில் உள்ள ஒரு கிரிக்கெட் மட்டையால் நாங்கள் இருவரும் சேர்ந்து அடித்து கொலை செய்தோம். கொன்ற உடலை கே ஆர் பெட் என்ற இடத்திலுள்ள கால்வாயில் புதைத்தாக ஒப்புகொண்டார். விசாரணைக்கு பின் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications