2 முறை தலைமை நீதிபதி பதவியைத் தவற விட்ட செல்லமேஸ்வர்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ள மூத்த நீதிபதி செல்லமேஸ்வர், 2 முறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தவற விட்டவர் ஆவார்.
வழக்குகள் ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி சரியாக செயல்படுவதில்லை என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் நீதிபதி செல்லமேஸ்வரும், மேலும் 3 மூத்த நீதிபதிகளும். இந்திய நீதித்துறையை இது அதிர்ச்சியுறவைத்துள்ளது.
இந்த நிலையில் நீதிபதி செல்லமேஸ்வர் மூன்று முறை தலைமை நீதிபதி பதவியை தவற விட்ட பின்னணி வெளியாகியுள்ளது. நீதிபதி செல்லமேஸ்வர் நீதிபதிகள் நியமன முறையை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார். காலேஜியம் முறைக்கு அவர் எதிரானவர். இதை பகிரங்கமாகவே பலமுறை அவர் கூறியுள்ளார். காலேஜியம் கூட்டங்களில் இவர் கலந்து கொள்வதும் இல்லை.

அதிர்ஷ்டத்தைத் தவற விட்டவர்
உண்மையில் நீதிபதி செல்லமேஸ்வர், அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சொல்ல வேண்டும். இவருடைய சீனியாரிட்டி இவருக்கு உதவவில்லை. தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை, 2 முறை தவற விட்டவர் நீதிபதி செல்லமேஸ்வர்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2007ம் ஆண்டு மே 3ம் தேதி நியமிக்கப்பட்டவர் செல்லமேஸ்வர். நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஜே.எஸ். கெஹர் ஆகியோர் ஹைகோர்ட் தலைமை நீதிபதிகளாக முறையே 2009 டிசம்பர் 23, 2009 நவம்பர் 29 ஆகிய தேதிகளில் நியமிக்கப்பட்டவர்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் செல்லமேஸ்வர்தான் சீனியர்.

தவறிப் போன வாய்ப்புகள்
இவர்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு செல்லமேஸ்வருக்குத்தான் முதலில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதலில் கெஹர் அப்பொறுப்பில் 2001 செப்டம்பர் 13ம் தேதி நியமிக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு தீபக் மிஸ்ராவும், செல்லமேஸ்வரும் நியமிக்கப்பட்டனர். இதனால் கெஹர், தீபக் மிஸ்ரா ஆகியோருக்கு ஜூனியராகி விட்டார் செல்லமேஸ்வர்.

உயர்நீதிமன்ற சீனியாரிட்டி கை கொடுக்கவில்லை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சீனியாரிட்டிபடி வைத்துப் பார்த்தால் செல்லமேஸ்வர்தான் சீனியர். இவருக்கு அடுத்த அடுத்த இடத்தில்தான் கெஹர், தீபக் மிஸ்ரா ஆகியோர் வருவார்கள். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்கூர் ஓய்வு பெற்றதும் அந்த இடத்திற்கு செல்லமேஸ்வர்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் அது பறி போய் கெஹர் நியமிக்கப்பட்டார். அவருக்கு அடுத்தும் கூட செல்லமேஸ்வர் வரவில்லை. மாறாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
இப்படி அடுத்தடுத்து புறக்கணிக்கப்பட்டுள்ளார் நீதிபதி செல்லமேஸ்வர். இவையெல்லாம் சேர்ந்துதான் அவரை கொதிக்க வைத்துள்ளதாக கருதப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications