For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்தியப் படைகள் தயாராக உள்ளது.. தேவைபட்டால் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படும்..உள்துறை அமைச்சகம்

தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்ப தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்- வீடியோ

    டெல்லி: தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்ப தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

    அந்த அதிர்ச்சி துக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்றும் போலீசார் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியை நடத்தி வருகின்றனர்.

    இளைஞர் கொலை

    இளைஞர் கொலை

    தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீசார் இன்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் சிகிச்சை

    மருத்துவமனையில் சிகிச்சை

    5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ராஜீவ் கவுபா

    ராஜீவ் கவுபா

    இதனால் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக செயலளார் ராஜீவ் கவுபா தமிழக தலைமை செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    மத்திய படைகள்

    மத்திய படைகள்

    அப்போது தூத்துக்குடியில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து அவர் கேட்டறிந்தார். தேவைப்பட்டால் தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்பி அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மத்திய படைகள் தயார்

    மத்திய படைகள் தயார்

    மத்தியப் படைகள் தயாராக இருப்பதாகவும் ராஜீவ் கவுபா கூறியுள்ளார். தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் என்றும் உள்துறை அமைச்சக செயலாளர் கவுபா தெரிவித்துள்ளார்.

    போலீஸ் ஒடுக்க முடியவில்லை

    போலீஸ் ஒடுக்க முடியவில்லை

    இதனிடையே தூத்துக்குடிக்கு துணை ராணுவம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி போராட்டத்தை போலீஸ் ஒடுக்க முடியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    வேண்டுகோளை ஏற்று

    வேண்டுகோளை ஏற்று

    தமிழக போலீசால் முடியவில்லை என்பதால் துணை ராணுவத்தை மத்திய அரசு அனுப்புகிறது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று துணை ராணுவத்தை மத்திய அரசு அனுப்புகிறது.

    English summary
    The Union Home Ministry said it is ready to send central forces to Thoothukudi. Paramilitary forces are coming to Thoothukudi. The Central government said the police could not suppress the Thoothukudi protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X