100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 17 பேர் பரிதாப பலி..
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருக்குலைந்ததில் அதில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அல்மோரா மாவட்டம், பிதோராகிராம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக திடீரென்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 40 பேரில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் ஹரீஷ் ராவத், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 20,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications