2 வருஷம் ஆடாவிட்டாலும் சி.எஸ்.கே ரசிகர்கள் வெறி அப்படியேதான் உள்ளது.. இந்த திருமண அழைப்பிதழே சாட்சி
சென்னை: ஐபிஎல் தொடரில் இரு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடாமல் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அந்த அணி மீது வைத்த அன்பு மட்டும் மாறவேயில்லை.
டோணி தலைமையிலான சிஎஸ்கே அணி, தமிழகத்து ரசிகர்களால் மட்டுமல்ல இந்தியாவின் மொத்த ரசிகர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு அணியாகும்.
அடுத்த வருடம் சிஎஸ்கே களமிறங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ஸ்டேடிய டிக்கெட் பாணியில் சிஎஸ்கே ரசிகர்கள் பிரிண்ட் செய்த திருமண அழைப்பு ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

சிங்கம்ல
மஞ்சள் நிற டிக்கெட்டில் மணமகன் மற்றும் மணமகள் பெயர்கள் சிஎஸ்கே சின்னமான சிங்கம் பின்னணியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் என்றதும் நினைவுக்கு வருவது இந்த சிங்கம்தான்.

வைரல் போட்டோ
சென்னையில், வளசரவாக்கம் பகுதியிலுள்ள ஸ்ரீகணேஷ் மகாலில் இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக அந்த பத்திரிகையில் தகவல் உள்ளது. இருப்பினும், திருமண தேதியை மறைக்கும் வகையில் எடிட் செய்து சோஷியல் மீடியாவில் பத்திரிகை சுற்றி வருகிறது.

அன்பும், ஆசியும் போதும்
நுழைவு கட்டணம் என்ற இடத்தில் உங்கள் அன்பு என்றும், வரி என போடப்பட்டுள்ள இடத்தில் ஆசிகள் என்றும் எழுதப்பட்டுள்ளது. மொத்த தொகை எனும் இடத்தில் உங்களது வருகை என சென்டிமென்டாக போடப்பட்டுள்ளது.

கொண்டாட்டம்
முகூர்த்தம், வரவேற்பு என அனைத்துமே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு வழங்கப்படும் டிக்கெட் பாணியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமணத்தையே ஒரு ஐபிஎல் போல கொண்டாடுகிறது இந்த ஜோடி.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications