உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதை.. அசத்தும் யோகி அரசு! விரைவில் ஆணையம் அமைக்க ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதையை அமைப்பது குறித்து ஆராய்வதற்கு ஆணையம் ஒன்றை அமைக்க உள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது கிடையாது. யோகி ஆதித்யநாத் தான் தற்போது இந்த சாதனையை செய்திருக்கிறார். இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக பாஜக பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

The Yogi Adityanath government is setting up a commission to build a new waterway in Uttar Pradesh

ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை உத்தரப் பிரதேச அரசு மீது கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு எதுவும் உ.பியில் நடக்கவில்லை. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில்தான் நடைபெற்றது.

ஆனால் தற்போது முதல் முறையாக உ.பியில் இந்த மாநாடு நடைபெற்றிருப்பது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டி வருகிறார். அதேபோல முடிவுற்ற பல திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இதனைத் தொடர்ந்து நேற்று (மே.25) தனியார் தொழில் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான நிதியுதவியை வழங்கினார்.

அலிகார், சஹாரன்பூர் மற்றும் கான்பூர் தேஹாத் ஆகிய இடங்களில் உள்ள தனியார் தொழில் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான முதல் தவணை ₹16.89 கோடிக்கான செக் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், புதிய நீர் வழிப்பாதை குறித்து கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது,

"உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி முதல் ஹல்டியா வரையில் முதல் நீர் வழிப்பாதை உருவாக்கப்படும். இதற்கான ஆய்வை நடத்த ஆணையம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும் நகரங்களையும் இணைக்கும் தொலைநோக்கு பார்வை இல்லாததால் கடந்த ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் பாஜகவின் ஆட்சியில் வளர்ச்சி அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+