பணக்கார டெல்லி, ஏழை டெல்லி என இரண்டாக பிரிந்து கிடக்கும் தலைநகரம்.. நிதீஷ் குமார் வேதனை
டெல்லி: தலைநகர் டெல்லி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. ஏழைகள் ஒரு பக்கமாகவும், பணக்காரர்கள் இன்னொரு பக்கமும் இங்கு உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்று கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.
டெல்லியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், டெல்லி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இங்கு பணக்காரர்கள் ஒருபக்கம் ஜொலித்தபடி உ்ளனர். பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பல பகுதிகளை இங்கு பார்க்க முடிகிறது. இன்னொரு புறமோ ஏழைகள், பரம ஏழைகள் நிரம்பி வழியும் பகுதிகள் உள்ளன. அங்கு குடிநீர் கிடையாது, நல்ல சாலைகள் கிடையாது, மின்சாரம் கிடையாது, கழிவு நீர் வசதிகள் கிடையாது. எனவே டெல்லியை பணக்கார டெல்லி, ஏழை டெல்லி என்று பிரித்துக் கூறும் அளவில் நிலைமை உள்ளது.

பீகாரிலிருந்து வந்த பலர்தான் டெல்லியை வளர்த்து ஆளாக்கியவர்கள். ஆனால் அவர்கள் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த தலைநகரத்தின் செழுமைக்காக பாடுபட்டவர்கள். அவர்களுக்கும் விமோச்சனம் இல்லை.
பீகார், பூர்வாஞ்சலைச் சேர்ந்தவர்கள் இங்கு வேலை செய்யாமல் நிறுத்தினால், டெல்லியே ஸ்தம்பித்துப் போய் விடும் என்றார் நிதீஷ் குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications