'மதநூல் படிக்க சொன்னார்கள்.. பிளான் A தோல்வி என்றனர்!' தீவிரவாதிகளை நேரில் பார்த்த பெண் வாக்குமூலம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தாக்குதலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) உட்பட பல்வேறு விசாரணை முகமைகள் இந்தத் தாக்குதல் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரைத் தான் நேரில் கண்டதாகவும், அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த ஏக்தா திவாரி என்ற பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரூ. 20 லட்சம் பரிசு
பஹல்காம் தாக்குதலை நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் ஓவியங்களை பாதுகாப்பு முகமைகள் வெளியிட்டுள்ளன. இந்த மூவரையும் பற்றிய தகவல் அளிப்போருக்கு தலா ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான், ஜம்மு காஷ்மீர் சென்றுவிட்டு சமீபத்தில் திரும்பிய ஜான்பூரைச் சேர்ந்த ஏக்தா திவாரி, வெளியிடப்பட்ட ஓவியங்களில் உள்ள பயங்கரவாதிகளில் இருவருடன் தங்களது குழு மோதலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து ஏக்தா திவாரி கூறுகையில், "எங்கள் குழுவில் 20 பேர் இருந்தோம். ஏப்ரல் 13 அன்று ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம். ஏப்ரல் 20 அன்று பஹல்காம் சென்றோம். அன்று எங்கள் குழுவினருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. அதனால், தாக்குதல் நடந்த பைசரன் பகுதிக்கு சுமார் 500 மீட்டர் முன்பாகவே அனைவரும் இறங்கினோம். சுற்றிலும் இருந்த சிலரின் நோக்கம் சரியாகத் தோன்றவில்லை. அவர்கள் எங்களிடம் குரான் படிக்கச் சொன்னார்கள்" என்றார்.
கழுதையில் ஏறியபோது தீவிரவாதிகளுடன் மோதல்
தொடர்ந்து ஏக்தா கூறியதாவது: "நாங்கள் கோவேறு கழுதைகளில் (mule) ஏறிக்கொண்டிருந்தபோது, இரண்டு பேர் எங்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் என்னைப் பற்றியும், எங்கள் குழுவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் விசாரித்தனர். நாங்கள் என்ன மதம், இந்துவா முஸ்லிமா என்றும் கேட்டனர். மேலும், குரான் படிக்கச் சொன்னார்கள். ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் என்றும் கேட்டனர். என் சகோதரர் ருத்ராட்சம் அணிய பிடிக்கும் என்று சொன்னபோது, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் அங்கிருந்து இறங்கி, மற்ற கோவேறு கழுதை ஓட்டுபவர்களின் உதவியுடன் திரும்பிவிட்டோம்."
பிளான்-ஏ தோல்வி
சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவருக்கு ஒரு அழைப்பு வந்தது என்றும், சிறிது தூரம் சென்ற பிறகு, அவர் தொலைபேசியில் ரகசிய குறியீட்டு வார்த்தைகளில் "பிளான்-ஏ தோல்வியடைந்துவிட்டது" என்று கூறியதாகவும் ஏக்தா திவாரி தெரிவித்துள்ளார். 35 துப்பாக்கிகளை அனுப்புவது குறித்தும் அவர்கள் பேசினர் என்றும் அவர் கூறினார்.
"இந்த விஷயங்கள் என் சந்தேகத்தை ஆழப்படுத்தின. 35 துப்பாக்கிகள் பற்றி பேசிய பையனின் புகைப்படம் என்னிடம் உள்ளது. பயங்கரவாதிகளின் ஓவியங்கள் வெளியான பிறகு, நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்" என்று ஏக்தா திவாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Jaunpur, Uttar Pradesh: Ekta Tiwari, tourist who identified the terrorist says, "We were a group of 20 people and reached Pahalgam on April 20. That very day, we sensed something suspicious, so we got off about 500 meters before the Baisaran area—where the attack took place. The… pic.twitter.com/vZGKSbCqhK
— IANS (@ians_india) April 24, 2025
கணவர் வாக்குமூலம்
இதற்கிடையே, ஏக்தா திவாரியின் கணவர் பிரசாந்த் திவாரி கூறியதாவது: "நாங்கள் வைஷ்ணோ தேவி தரிசனத்துக்காக இங்கிருந்து புறப்பட்டோம். கட்ராவில் வைஷ்ணோ தேவியை தரிசித்த பிறகு, ஒரு முழு பேக்கேஜ் டூர் எடுத்தோம். எங்கள் குழுவில் 20 பேர் இருந்தனர். என் மனைவியுடன் நடந்து வந்த ஒருவன் அவரை குரான் படிக்கச் சொன்னான். அதை அவர் என்னிடம் தெரிவித்தார். நாங்கள் அங்கிருந்து திரும்பிச் செல்லச் சொன்னபோது, அவர்கள் எங்களுடன் சண்டையிடத் தொடங்கினர்."
அவர்களை சந்தேகிக்க மிக முக்கியமான காரணம், அவர்கள் திரும்பத் திரும்ப குரான் படிக்கச் சொன்னதுதான் என்றும், எங்கள் முகவரியையும் கேட்டனர் என்றும், துப்பாக்கிகளை அனுப்புவது பற்றிய பேச்சு எங்கள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது என்றும் அவர் கூறினார். ஏக்தா திவாரியின் இந்த வாக்குமூலம் பாதுகாப்பு முகமைகளின் விசாரணையில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களாகவே மதரீதியாக மக்களை பிரித்து பார்த்தபடி வந்த தீவிரவாதிகள், பிறகு நேரம் எடுத்து துப்பாக்கி சூடு நடத்தியிருப்பதாக இந்த பெண்ணின் வாக்குமூலம் கருத வைக்கிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் ஆரம்பத்திலேயே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தர மறந்துவிட்டது சோகம்தான்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications