பஞ்சாப் தாக்குதல்: பயங்கரவாதிகளில் ஒருவர் பெண்.. 5 நிமிடத்திற்கு ஒரு முறை துப்பாக்கிச் சூடு...

Subscribe to Oneindia Tamil

குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் 5 நிமிடத்திற்கு ஒரு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்த தாக்குதலில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் பெண் ஒருவரும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகர் காவல் நிலையம் மற்றும் பேருந்து ஒன்றின் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தீவிரவாதிகள் நேற்று இரவு இந்தியாவுக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று உளவுத்துறை கருதுகிறது. அவர்கள் ஒரு காரை திருடி வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிகாலை நேரம் பாதுகாப்பு பலமாக இருக்காது என்று நினைத்து தான் அவர்கள் அந்த நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில்,

அவர்கள் எப்பொழுது வந்தார்கள், எப்பொழுது துப்பாக்கிச்சூட்டை துவங்கினார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் ராணுவ உடை அணிந்திருந்தனர். அதில் ஒரு தீவிரவாதி பெண் ஆவார். ஒரு துப்பாக்கி குண்டு என் காது அருகே சென்றது. நான் திரும்பிப் பார்த்தபோது ஒரு குண்டு என் தோளில் பாய்ந்தது.

8 முதல் 10 தீவிரவாதிகள் இருந்தனர். அவர்கள் 5 நிமிடத்திற்கு ஒருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்றார். தீவிரவாதிகள் காவல் நிலையத்தை தாக்கும் முன்பு பேருந்து மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+