கல்லாப்பெட்டியில் 'கை' வைக்கல... வெங்காயத்தை திருடிய திருடர்கள்.. கடைக்காரர் கதறல்
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நிறைய இடங்களில் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கனமழை பெய்த காரணத்தால் கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

பொங்கல் வரை
அரசு வெங்காய தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தற்போதைய நிலையில் பொங்கல் பிறக்கும் வரை வெங்காய விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.

மேற்கு வங்கம்
இந்நிலையில் மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் காய்கறி கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றுள்ளார்கள்.. அக்சயா தாஸ் என்பவருக்கு சொந்தமான சுடஹட்டா பகுதியில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது.

பணம் திருடவில்லை
கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் கடையைத் திறக்க சென்ற போது, கடையில் பூட்டை திருடர்கள் கொள்ளையடித்தை கண்டு அக்சயா தாஸ் அதிர்ச்சி அடைந்தார். நேராக கல்லாப்பெட்டியை திறந்த பார்த்த போது அதில் உள்ள பணம் அப்படியே இருந்திருக்கிறது.

50ஆயிரம் மதிப்பு
ஆனால் கடையில் இருந்த ரூ.50ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடியிருக்கிறார்கள். மேலும் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றையும் அதிக அளவு திருடியிருக்கிறார்கள். இதனால் மிகுந்த வேதனை அடைந்த கடைக்காரர் தாஸ் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications