3வது அணி வெல்லும்... காங்கிரஸ், பாஜக அழிந்து போகும்: அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மூன்றாவது அணிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும், அது காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக அமையும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் உத்திரப்பிரதேச முதல்வரான அகிலேஷ் யாதவ்.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்தனகையில், உத்தரபிரதேச மாநில முதல்வரான அகிலேஷ் யாதவ் ஹார்டோயில் சமாஜ்வாடி தொண்டர்களை சந்தித்து பேசினார்.

அந்தச் சந்திப்பில், அவர் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது :-

மூன்றாவது அணி...

மூன்றாவது அணி...

மூன்றாவது அணியின் வளர்ச்சியைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் நிச்சயமாக அது, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவை அழிக்கும் எனத் தெரிகிறது.

விளம்பரம் தான் காரணம்....

விளம்பரம் தான் காரணம்....

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசயிகளுக்கு இலவசமான தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், சரியான விளம்பரம் இல்லாததால் அது வெளியே தெடியவில்லை. டெல்லியில் அரசோ ஒரு மாதத்திற்கு 700 லீட்டர் தண்ணீரை மட்டும் இலவசமாக அளிக்க உள்ளதாக கூறியது. அது சர்வதேச செய்தியாக மாறிவிட்டது' என்றார்

ஆம்புலன்ஸ் வாதி....

ஆம்புலன்ஸ் வாதி....

அதேபோல், இனி, குழந்தை பெற்ற தாய்மார்கள் வீட்டுக்கு செல்ல ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தையும் அகிலேஷ் அறிவித்துள்ளார்.

ஆதரவு...

ஆதரவு...

அதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் நரேஷ் அகர்வால் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் மத வன்முறை தடுப்பு மசோதாவை கொண்டுவரக்கூடாது என்று காங்கிரஸ் மற்று பாரதீய ஜனதா உடன்படிக்கை செய்துள்ளது. மேலும், அவையில் மசோதாவை தாக்கல் செய்ய சமாஜ்வாடி அனைத்து உதவிகளையும் செய்யும்' எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+