சென்னையில் நவ.12-ல் தேசிய தலித் முன்னணி கூட்டம்! பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே பங்கேற்பு- திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னையில் நவம்பர் 12-ந் தேதி தேசிய தலித் முன்னணி கூட்டம் நடைபெற உள்ளது; இதில் மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று அந்த முன்னணியின் துணைத் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை இன்று தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

ராம்விலாஸ் பஸ்வானை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். சென்னையில் வருகிற நவம்பர் 12-ந் தேதி தேசிய தலித் முன்னணி கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் கலந்து பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications