பாஜக வெறுப்பை உமிழ்கிறது.. மக்களை பிரிக்கிறது.. முதல் உரையிலேயே அசத்திய பிரியங்கா காந்தி!
பாஜக அரசு நம்மிடையே வெறுப்பை உமிழ்ந்து மக்களை பிளவுபடுத்தி இருக்கிறது என்று தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
காந்தி நகர்: பாஜக அரசு நம்மிடையே வெறுப்பை உமிழ்ந்து மக்களை பிளவுபடுத்தி இருக்கிறது என்று தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமான நாள், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா காந்தி இன்றுதான் தனது முதல் அரசியல் பேச்சை தொடங்கினார்.
அதுவும் அவர் தனது உரையை தொடங்கியது பிரதமர் மோடியின் கோட்டையான குஜராத்தில். குஜராத்தில் உள்ள காந்தி நகரில் இன்று காங்கிரஸ் பிரம்மாண்ட மாநாடு நடத்தியது.

முக்கியமான மாநாடு
ஏப்ரல் 11ம் தேதி தொடங்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக குஜராத்தில் காங்கிரஸ் நடத்திய மிகப்பெரிய மாநாடு இதுவாகும். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முதல்முறை உரையாற்றிய பிரியங்கா காந்தி சுமார் 20 நிமிடங்கள் மக்கள் முன்னிலையில் பேசினார்.

என்ன பேசினார்
பிரியங்கா தனது உரையில், இந்த நாடு அன்பால் உருவாக்கப்பட்டது. ஒற்றுமையும், சகோதரத்துவமும் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் நாம் இப்போது அதை இழந்துவிட்டோம். நம் நாட்டில் தற்போது மிக மோசமான விஷயங்கள் வரிசையாக நடந்து வருகிறது.

ஒரே பிரச்சனை
நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும். அதற்கு எதிராக இருக்கும் விஷயங்களை நாம் உடனடியாக களைய வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது குறித்து பேச வேண்டும். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் .

நன்றாக யோசியுங்கள்
நம்முடைய பிரச்சனை இதுதான். இந்த தேர்தல் எதற்காக என்று மக்கள் கவனமாக யோசிக்க வேண்டும் . நீங்கள் இந்த தேர்தலில் எதை தேர்வு செய்ய போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்ய போகிறீர்கள். தேவையில்லாத விஷயங்களை நாம் இங்கே விவாதிக்க கூடாது.

அழிந்தது
நம்முடைய நிறுவனங்களை, அரசை இந்த பாஜக அரசு அழித்துவிட்டது . சாலைகளில் வன்மத்தை விதைத்து இருக்கிறார்கள். வெறுப்பை உமிழ்கிறார்கள். இந்த நாட்டை காப்பதை விட நமக்கு வேறு வேலை இப்போது இல்லை. இதற்காக நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும், சேர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications