நாசிக்கில் கிடையாது.. ரூ.2000 நோட்டுக்கள் ரகசியமாக பிரிண்ட் ஆனது எங்கே தெரியுமா?
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் நாசிக்கை தவிர்த்து இன்னொரு நகரில் ரகசியமாக அச்சிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைசூர் : புதிய 2000 ரூபாய் நோட்டுகள் நாசிக் தவிர்த்து தென் மாநிலம் ஒன்றில்தான் ரகசியமாக கடந்த ஆகஸ்ட். செப்டம்பர் மாதங்களில் அச்சிடப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அண்மையில் அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளிடப்பட்டன.

மோடியின் இந்த திட்டம் மிகவும் ரகசியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் மைசூரில் ரகசியமாக அச்சிடப்பட்டது தெரியவந்துள்ளது.
இங்கு சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் உதவியுடன் அச்சகம் அமைக்கப்பட்டு 480 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளும் அதே அளவிலான 500 ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளது.
நாசிக், சல்போனி ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதுதான் வழக்கம். ஆனால் விஷயம் வெளியே கசிந்துவிட கூடாது என்பதற்காக புதிய நோட்டுகள் மைசூரில் அச்சிடப்பட்டுள்ளன. இத்தாலி, ஜெர்மனி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பேப்பரில் புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது மைசூரில் உள்ளதை போன்று சல்போனியில் ஜப்பான் நிறுவனத்தின் உதவியுடன் மேலும் ஒரு அச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அம்சமாக மங்கள்யான் செயற்கைகோளின் படமும் இந்த ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளது. இதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால் கள்ள நோட்டுகளை உருவாக்க முடியாது என்றும் கூறப்பட்டுகிறது. 2000 ரூபாய் நோட்டில் 17 புதிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பார்வையற்றோருக்கு வசதியாக ரூபாய் நோட்டின் நடுவில் அசோக சக்கரமும் மகாத்மா காந்தியின் படமும் இடம்பெற்றுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications