மேக் இன் இந்தியா: இனி இந்தியா சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறுமாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இறக்குமதியை குறைத்துவிட்டு, இந்தியாவை உற்பத்தி சார்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் மேக் இன் இந்தியா என்ற கோஷத்தை இன்று அறிமுகம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த கோஷத்தை பிரபலப்படுத்தவும், அதுகுறித்த விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளவும் http://www.makeinindia.com என்ற பிரத்யேக வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வெப்சைட்டில் மொத்தம் 25 துறைகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு துறையும் சிங்கத்தின் படத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது. சிங்கத்தின் வடிவத்தின் மீது துறை சார்ந்த படங்கள் இடம் பெற்று வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த வெப்சைட்.

குஜராத்தின் கிர் காடுகள் சிங்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பாலோ, சிங்கம் போல வலிமையாக இந்தியா நடைபோட வேண்டும் என்ற குறியீட்டாலோ இந்த சிங்கங்களை முன்னிலைப்படுத்தியுள்ளது வெப்சைட். விழாவில் பேசிய பிரதமரும் இது சிங்கத்தின் நடை என்று தனது திட்டத்தை வர்ணித்தார். சிங்கத்தின் ராஜ நடையை நாமும் பார்ப்போம்.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

வெப்சைட்டில் முதலில் இருப்பது ஆட்டோமொபைல் துறைதான். அடுத்த ஆண்டுக்குள் உலகிலேயே நான்காவது மிகப்பெரிய ஆட்டோமோட்டிவ் மார்க்கெட்டாக இந்தியா உருவாகும் என்று இதற்கான குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கத்தின் மீது வாகனங்களின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை படத்தில் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள்

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள்

இந்த பிரிவில், உலகிலேயே இரும்பு உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் உதிரிபாக துறையில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மஞ்சள் நிற சிங்கத்தின் உடலில் உதிரிபாகங்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

விமான துறை

விமான துறை

உலகின் 9வது மிகப்பெரிய விமான மார்க்கெட்டை கொண்டது இந்தியா. 2020ல் இந்த பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று கூறியுள்ளனர் இந்த பக்கத்தில். விமான உதிரி பாகங்கள் சிங்கத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளன.

பயோ டெக்னாலஜி

பயோ டெக்னாலஜி

அடுத்ததாக நாம் பார்ப்பது பயோ டெக்னாலஜி சிங்கம். பயப்பட வேண்டாம். சிங்கத்தின் உடலில் உயிரி தொழில்நுட்பம் சார்ந்த படங்களை பொறித்துள்ளனர். ஆசிய பசிபிக் மண்டலத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது என்ற குறிப்பும் அதில் உள்ளது.

ரசாயனம்

ரசாயனம்

ஆசியாவிலேயே அதிக அளவு ரசாயன பொருட்களை தயாரிக்கும் மூன்றாவது நாடு இந்தியா என்பதை நினைவு கூர்ந்துள்ளதுடன், சிங்கத்தின் மீது பைக், குழாய்களை பொறித்துள்ளனர்.

கட்டுமானம்

கட்டுமானம்

2017க்குள் 1000 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கட்டுமான திட்டங்கள் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். கட்டுமான தொழிலில் முதலீடு செய்ய உள்ள தடைகளை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை தயாரிப்பு

பாதுகாப்பு துறை தயாரிப்பு

ராணுவ தளவாட உற்பத்தி குறித்த இந்த பக்கத்தில் சிங்கத்தின் மீது ஏவுகணைகளின் படம் பொறிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட மூன்றாவது நாடு, 60 சதவீத ஆயுத தேவையை இறக்குமதி மூலமே தற்போது இந்தியா பூர்த்தி செய்து வருகிறது என்பது போன்ற தகவல்கள் அதிலுள்ளன.

எலக்ட்ரிக்கல்

எலக்ட்ரிக்கல்

அடுத்ததாக எலக்ட்ரிக்கல் மெஷினரி சிங்கத்தை பொறித்துள்ளார்கள். 2007-12ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எலக்ட்ரிக்கல் துறையில் 10.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்

எலக்ட்ரானிக்

2020ம் ஆண்டுக்குள் 29 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களின் சந்தை மதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் இத்துறை 9.88 சதவீதம் வளர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்துதல்

உணவு பதப்படுத்துதல்

192 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் உணவு பயிர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உணவு பதப்படுத்தும் துறையில் இந்தியாவில் நல்ல வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 42 மெகா உணவு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தாண்டில் மட்டும் 118 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைக்க உள்ளதாகவும், இது 225 பில்லியனாக 2020ம் ஆண்டுக்குள் அதிகரித்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல் பதனிடும் துறை

தோல் பதனிடும் துறை

தோல் பதனிடும் துறையின் மார்க்கெட் மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாகவும், அதில் நடப்பு நிதியாண்டில் 6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊடகம் மற்றும் பொழுது போக்கு

ஊடகம் மற்றும் பொழுது போக்கு

ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறை 2018க்குள் 220 பில்லியன் ரூபாய் அளவுக்கு மார்க்கெட் மதிப்பை பெறும் என்றும், உலகிலேயே தொலைக்காட்சி மார்க்கெட்டில் 3வது இடம் இந்தியாவுக்குதான் என்றும், 800 டிவி சேனல்கள் இந்தியாவில் ஒளிபரப்பாவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கம்

சுரங்கம்

சுரங்க தொழிலுக்கு அதிகபட்சமாக 20-30 வருடங்களுக்கு குத்தகை அளிக்கப்புடகிறது, 302 பில்லியன் டன் அளவுக்கு இங்கு நிலக்கரி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணை மற்றும் காஸ்

எண்ணை மற்றும் காஸ்

96 டிரில்லியன் கியூபிக் அடி அளவுக்கு எரிவாயு இருப்பு உள்ளதாகவும், 800 எம்எம்டி அளவுக்கு எண்ணை இருப்பு உள்ளதாகவும், ஆசியாவிலேயே எண்ணை சுத்திகரிப்பில் 2வது இடத்திலுள்ளது இந்தியாதான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தியல்

மருந்தியல்

2020ற்குள் உலகின் மூன்றாவது பெரிய மருந்தியல் மார்க்கெட் கொண்ட நாடாக இந்தியா மாற உள்ளதாகவும், அதே காலகட்டத்தில் 45 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருவாய் கிடைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம்

துறைமுகம்

நாட்டில் புதிதாக 87 துறைமுகங்களை அமைக்க உள்ளதாகவும், 800 மில்லியன் மெட்ரிக் டன் அளவுள்ள சரக்குகளை கையாள இந்தியாவால் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே

ரயில்வே

சரக்குகளை கையாளுவதில் உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளதாகவும், 1.3 மில்லியன் ஊழியர்கள் இதில் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி

உலகின் 5வது மிகப்பெரிய மின் உற்பத்தி நாடு, 5வது காற்றாலை மின் உற்பத்தி நாடு, 2022க்குள் 20000 மெகாவாட் மின்சாரத்தை சூரிய சக்தியால் பெறப்போகும் நாடு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை

நெடுஞ்சாலை

நெடுஞ்சாலைகளை உருவாக்க 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்றாண்டுகளில் 1 லட்சம் கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி

விண்வெளி

உலகிலேயே குறைந்த செலவில் விண்வெளி ஆய்வு திட்டங்களை நிறைவேற்றும் நாடு இந்தியாதான். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் 33 நாடுகளும், 3 சர்வதேச அமைப்புகளும் கூட்டாளிகளாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணி மற்றும் ஆடை

துணி மற்றும் ஆடை

உலகிலேயே அதிக அளவுக்கு சணல் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா, துணி உற்பத்தியில் உலகிலேயே 2வது மிகப்பெரிய நாடு என்பது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

அனல் மின் நிலையம்

அனல் மின் நிலையம்

123 பில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது, மின் உற்பத்தியில் உலகிலேயே 5வது இடம் போன்ற இந்திய சாதனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதத்தை இத்துறை பிடித்துள்ளது. 1 பில்லியன் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 6.97 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இத்துறைக்கு உயிரூட்டுகிறார்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

மாற்று மருந்துகள், ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதில், உலகிலேயே 2வது இடத்திலுள்ளது இந்தியா, இவ்வாண்டில் இத்துறை 162 பில்லியன் ரூபாய் மார்க்கெட்டை வைத்துள்ளது என்ற விவரம் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவிலை, ஆயுர்வேத பொருட்களால் சிங்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+